என்பது போல தலையாட்டி வைத்தாள்.
”உன் அப்பா அம்மாவை வரசொல்லு”
”மாமா அது வந்து” என தயங்க
”சொன்னதை செய் கூப்பிடு அவங்களை, அதுவரைக்கும் சின்ன மருமகள் இங்கதான் இருப்பா, அவங்க வரட்டும் என்ன நடந்ததுன்னு தீர விசாரிச்சிட்டு நான் முடிவு எடுக்கறேன், அதுவரைக்கும் இங்க சின்ன சத்தம் கூட வரக்கூடாது சொல்லிட்டேன்” என கடுமையாக சொல்லியவர் வேங்கையனைப் பார்க்க அவனும் சரியென தலையாட்டினான்.
ஜானகி உடனே தன் வீட்டிற்கு தகவல் அளித்து அவர்களது பெற்றோரை வரவழைத்தாள், அவர்கள் வருவதற்குள் மஹதி தனது உடைமைகளை பெட்டியில் அடுக்கியவள் வேங்கையனது புகைப்படத்தையும் எடுத்து வைத்துக் கொள்ள அதைக்கண்டபடி வந்த ஜானகியோ
”என்னடி செய்ற அவன் போட்டோ உனக்கெதுக்குடி அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே இன்னும் எதுக்கு நடிக்கற” என சொல்ல அதற்கு மஹதியோ
”நடிக்கலை ஜானு நான் வேங்கையனை விரும்பறேன்”
”லூசா நீ”
”ஆமாம் அவரால நான் பைத்தியமாயிட்டேன், இங்கிருந்த கொஞ்ச நாள்ல அவரை எனக்கு ரொம்பவே பிடிச்சிப் போச்சி, அவரை நான் காதலிக்கிறேன்”
”முட்டாளா நீ, நானே அவனை வேணாம்னு சொல்றேன், நீ எனக்காக உதவி செய்ய வந்து இப்படி அவன்கிட்ட மாட்டிக்கிட்டியே”
”சே சே அவர் மேல தப்பில்லை அவர் என்னோட காதலை ஏத்துக்கலை ஜானு”