(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”அப்படின்னா நீ அவன்கிட்ட உன் காதலை சொல்லிட்டியா”

  

”ஆமாம் நேத்து நைட் சொன்னேன், அவருக்குப் பிடிக்கலை போல, அதை அப்பவே சொல்லாம இப்ப என்னை இங்கிருந்து விரட்டறாரு அவரு பக்கம் இருந்து பார்த்தா அவரு சொன்னது உண்மைதானே, கல்யாணமான ஒருத்தரை நான் காதலிச்சது தப்புதானே, அதான் நான் ஊருக்கு போறேன் ஜானு, சாரிடி உனக்கு ஒரு நல்லது செய்யலாம்னு நினைச்சி வந்தேன் ஆனா என்னால முடியலை”

  

”சாரியெல்லாம் எதுக்கு விடு, நீ ஒண்ணு நினைச்ச ஆனா நடந்தது வேற ஒண்ணா இருக்கு, உன் காதலை வேங்கையன் ஏத்துக்கிட்டு இருந்திருந்தா எனக்கு உண்மையில நல்லது நடந்திருக்கும், நானும் மூர்த்தி மாமாவை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன்”

  

”அவசரப்படாத ஜானு நான் சொல்றதைக் கேளு உனக்கு மூர்த்தி ஏத்தவரு இல்லை”

  

”போதும் மஹதி என் பிரெண்டாச்சேன்னு அமைதியா இருக்கேன், அதுக்காக நீ எதை சொன்னாலும் கேட்கறதாயில்லை”

  

”கண்மூடித்தனமா நீ மூர்த்தியை விரும்பற ஆனா அவன் உன்னை விரும்பலை அவன் என்னை பார்க்கறான்“

  

”உளறாதடி“

  

”உளறலை அவனோட நடவடிக்கை சரியில்லை என்கிட்ட பழக நினைக்கறான் சொல்லப்போனா எப்படியாவது என்னை கல்யாணம் செய்துக்க நினைக்கறான் போல”

  

”சே சே இருக்காது, என் மூர்த்தி மாமா ரொம்ப நல்லவரு வேங்கையன்கிட்டயிருந்து என்னை பிரிக்க திட்டம் தீட்டறதை விட்டுட்டு மூர்த்தி மாமாகிட்டயிருந்து என்னை பிரிக்க திட்டம் தீட்டறியா, நீயெல்லாம் ஒரு தோழி சே”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.