இன்னொருத்தியை பார்க்கறது தப்பு” என சொல்ல
”ஜானகியை பெத்தவ நான் சொல்றேன், அவள் உனக்கு ஏத்தவள் இல்லை அவளை நம்பி உன் வாழ்க்கையை இழந்துடாத என்னிக்கிருந்தாலும் அவள் மூர்த்திகிட்ட போயிடுவா”
”அத்தை போதும் இனி ஒரு வார்த்தை என் ஜானகியை பத்தி தப்பா பேசினீங்க மரியாதை கெட்டுடும்“ என கோபத்தில் சொல்ல வேணி அத்தோடு அதிர்ச்சியில் வாய் மூடிக் கொள்ள ஜானகி பொங்கினாள்
”போதும் நிறுத்துங்க என் மனசுல மூர்த்தி மாமாதான் இருக்காரு நான் வாழ்ந்தாலும் செத்தாலும் அவரோடதான், என்னால வேங்கையனோட வாழ முடியாது இப்பவே எங்களை பிரிச்சி விட்டுடுங்க” என கத்த அதிர்ந்தான் வேங்கையன்
”ஜானகி என்ன பேச்சு இது, சரி சரி உனக்கு ஏத்தமாதிரி நான் என்னை மாத்திக்கிறேன் எப்படியிருக்கனும்னு சொல்லு நாம சேர்ந்து வாழலாம்” என கெஞ்ச அவளோ
”நீ மாறவே வேணாம் நான் உன்னை ஏத்துக்கறதாயில்லை என்னை விட்டுடு”
”அப்படி சொல்லாத நீதான் என் உலகமே”
”எனக்கு உன்னைப் பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை” என வீடு அதிர கத்தினாள். அதில் வேங்கையன் முகம் கருத்துவிட்டது அவமானத்தில் தலைகுனிந்தான்.
இப்போது வீரசிங்கம் தலைஎடுத்துப் பேசினார்
”முடிஞ்சதா இல்லை இன்னும் பாக்கியிருக்கா, வீடா இது இல்லை சந்தைகடையா ஆளாளுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க சே” என சத்தம் போட அவ்வளவுதான் அவ்விடமே பேரமைதிக்கு வந்தது.
”இந்தாம்மா ஜானகி இப்ப என்னதான் சொல்ல வர்ற உனக்கு என் பையன் வேணாமா” என கேட்க அவளோ