பொண்ணாடா அவள் வெட்கம் கெட்டவ, புருஷன் இருக்கறப்பவே உன்கிட்ட உறவாட நினைக்கறா, சீ சீ இதுக்கு மஹதி எவ்வளவோ பரவாயில்லை, தோழிக்கு உதவி செய்ய வந்து மாட்டிக்கிட்டா, இதுல வேங்கையன் பக்கமும் தப்பிருக்கு, அவன் ஏதாவது ஆசை வார்த்தை பேசியிருப்பான், அதுல மஹதி மயங்கியிருப்பா, இப்ப என்ன உனக்கு மஹதியை பிடிச்சிருக்கா அது போதும் அவளை பேசி முடிக்கலாம், நான் போய் பெட்டியெல்லாம் எடுத்து வைக்கிறேன்” என சொல்லிவிட்டு அறைக்குச் செல்ல மூர்த்தி முகம் மலர்ந்தான்.
வீரசிங்கமோ நடப்பதை கவனித்தபடிதான் இருந்தார், ஆளாளுக்கு ஏதேதோ நினைப்பில் இருக்க மஹதி மட்டும் உயிர் தோழியான ஜானகியைப் பார்த்து கண்கலங்கி நிற்க, அவளோ முறைத்து பார்க்க அடுத்து வேங்கையனை பார்த்தாள் ஏக்கத்துடன்,
அவனோ வெறுப்பை காட்ட அதில் அவள் மனம் புண்பட்டது, போதும் என நினைத்தவள் வீரசிங்கத்திடம் வந்து ஏதும் பேசாமல் கைகூப்பி தலையை மட்டும் ஆட்டிவிட்டு திரும்பி இரண்டடி எடுத்து வைக்க குபேரனும் வேணியும் வந்தார்கள், அவர்களைக்கண்டதும் மஹதி தலைதாழ்த்தினாள், வந்தவர்களுக்கு நடந்தது எதுவும் தெரியாமல் போனதால் நேராக மஹதியிடம் வந்து பேசினார்கள்
”மஹதி என்னம்மா என்னாச்சி” என கேட்க அவளோ
”என்னை மன்னிச்சிடுங்க நான் உங்களுக்கு துரோகம் இழைச்சிட்டேன்” என அழ அவர்களுக்கு சங்கடமாகிப் போனது. வீரசிங்கமோ வந்தவர்களிடம்
”வந்துட்டீங்களா சந்தோஷம் ஆமா என்ன நினைச்சிக்கிட்டு நீங்க இந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போனீங்க சொல்லுங்க” என சத்தமாக கேட்க குபேரன் அதிர்ந்தார் வேணியோ அச்சம் கொண்டாள்.
”அது வந்து வேங்கையனுக்காக இவளை கூட்டிட்டு வந்தோம்”
”நடந்த உண்மை எல்லாம் வெட்டவெளிச்சமாயிடுச்சி தேவையில்லாம பொய் சொல்ல வேணாம்” என சொல்ல குபேரன் அதிர்ந்தார் பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு