”நானும் ஒரு மாசமா உன்னை கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன், உன் முகமே சரியில்லை வாழ்க்கையை வெறுத்தவன் போல அலையற, இப்படியே உன்னை விட்டா நீயே போதும் உன் வாழ்க்கையை அழிச்சிக்கறதுக்கு, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் உன் அப்பா அம்மா இறந்தபின்னாடி உன்னை பார்த்துக்கற பொறுப்பு முழுக்க முழுக்க என் கையில வந்துடுச்சி, நான் என்ன முடிவு எடுக்கறோன்னோ அதுக்கு நீ சம்மதிச்சிதான் ஆகனும்”
”என்னை கட்டாயப்படுத்தாதீங்க தாத்தா“
”உன்னை கட்டாயப்படுத்தலை பரிகாரம் செய்ய சொல்றேன்”
”பரிகாரமா”
”ஆமாம் உன்னால அவளோட அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க அதுக்கு நீ பிராயசித்தம் செய்யலாமே”
”ப்ளாக்மெயில் பண்றீங்களா அறியா வயசுல நடந்த சம்பவம் அது, என்னோட தப்பாவே இருந்தாலும் இழப்பு அவளுக்கு மட்டும்தானா எனக்கும்தானே”
”உனக்கு நானாவது இருக்கேன், பணம் இருக்கு புகழ் இருக்கு ஆனா அவளுக்கு என்ன இருக்கு அநாதை போல இருக்கா, அவளைப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு”
”தாத்தா அவளுக்கு நல்லது செய்யனும்னு ஆசைப்பட்டா வேற யாரையாவது அவளுக்கு கட்டிவைங்களேன், அவளுக்கு வசதியில்லையா தாராளமா வேணும்ங்கற பணத்தை அவளுக்கு கொடுங்க, நல்லபடியா வாழ வைங்க என்னை விட்டுடுங்க தாத்தா”
”தப்பு செய்தவன் நீ அதுக்கான பரிகாரத்தை நீதான் செய்யனும் என்னதான் அவளுக்கு நான் ஒரு வாழ்க்கையை அமைச்சி தந்தாலும் அவளுக்கு நடந்த இழப்புக்கு என்னால எப்படி ஈடு செய்ய முடியும் சொல்லு”
”அய்யோ தாத்தா என்னைப் புரிஞ்சிக்குங்க”