”எதுவா வேணும்னாலும் இருக்கட்டும் எனக்கு அவள் வேணாம்”
”அவள்கிட்ட என்ன குறை கண்ட”
”குறைன்னு இல்லை எனக்கு அவளை கல்யாணம் செய்துக்கனும்னு தோணலை”
”அதான் ஏன்”
”அது ஒரு ஃபீலிங் தாத்தா ஒருத்தவங்களை பார்த்தா அவங்களோட வாழ்க்கை முழுக்க வாழனும்னு அடிமனசுல இருந்து தோணனும் ஆனா கண்ணகியை பார்த்தா அவளை கையெடுத்து கும்பிடனும்னுதான் தோணுது”
”உனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்தா உங்க வாழ்க்கை அமோகமா இருக்கும்”
”தாத்தா புரிஞ்சிக்குங்க, கண்ணகியை நான் பிரின்சிபாலாதான் பார்க்கிறேன் மனைவியா என்னால அவளை பார்க்க முடியலை”
”கல்யாணம் ஆனா தன்னால உன்னோட பார்வைகோணம் மாறும்”
”அதுக்கு வாய்ப்பில்லை தாத்தா”
”அப்போ வேற பொண்ணை பார்க்கவா”
“எனக்கு யாரும் வேணாம் தாத்தா”
”இப்படி சொன்னா எப்படி கண்ணகியையும் வேணாம்ங்கற வேற எந்த பொண்ணையும் வேணாம்ங்கற இப்படியே கல்யாணம் ஆகாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா”
”அதுல என்ன தப்பிருக்கு தாத்தா என் வாழ்க்கை நான் சுதந்திரமா இருக்கேன்“