”எனக்கு எந்த வயிற்றெரிச்சலும் இல்லை நீ எப்படி வாழ்ந்தா எனக்கென்ன வந்தது”
”அப்போ உனக்கு வருத்தமாயில்லை”
”துளிகூட இல்லை ஆமா உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா”
”சே சே உன்னை விட அழகான பொண்ணை கல்யாணம் செய்துக்கப் போறேன் நான் ஏன் வருத்தப்படப்போறேன்“
”அப்போ நான் அழகாயில்லையா அவள் என்னை விட அழகியா”
”ஆமாம் நீ ஒண்ணும் அவ்ளோ அழகில்லை ஏதோ பார்க்கற மாதிரியிருக்க என் முறைபொண்ணாச்சேங்கறதால விட்டுக்கொடுக்காம இருந்தேன் அவ்ளோதான்”
”சே உன்னோட பார்க்கறப்ப எனக்கு பார்த்து வைச்ச மாப்பிள்ளையை பார்த்தியா எவ்ளோ நிறமா இருக்காருன்னு”
”ஆமா போ நிறமா முக்கியம், வீரம்தான் முக்கியம் அவனை பாரு நோஞ்சானாட்டம் இருக்கான், நான் ஒரு அடி போட்டா விழுந்துடுவான் போல இருக்கே“
”எப்ப பாரு உனக்கு அடிதடி பேச்சுதானா”
”அதுக்குன்னு உன்னை போல பழிவாங்கற மாதிரியா பேச முடியும்”
என சொல்ல அவள் அமைதியாகிப் போனாள், மேற்கொண்டு பேச வார்த்தை வரவில்லை துக்கம் தொண்டையடைக்க கண்கள் கலங்கிப் போய் மௌனமானாள்.
அவனுக்கும் அதே நிலைமைதான் துக்கத்தை மறக்க பேசினாலும் எங்கே தனது மனக்குமுறல் வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் அடங்கிப் போனான்.