(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”நீ வேணாம்னு எப்படி முடிவு பண்ணாளோ அதே போல இந்த கல்யாணத்தையும் ஒத்துக்கிட்டா, அவளே கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ ஆசைப்படறப்ப நீ மட்டும் எதுக்காக இப்படியே இருக்கனும் நீயும் அவள் முன்னாடி கல்யாணம் செய்துக்கிட்டு வாழ்ந்து காட்டு”

  

”ப்ச் அப்பா வேணாம்பா”

  

”முடியாது இனி உன் பேச்சை நாங்க கேட்கறதாயில்லை வர்ற வெள்ளிக்கிழமை உனக்கு கல்யாணம் இதை மனசுல ஏத்திக்க” என சொல்லிவிட்டு செல்ல கொம்பனோ கலங்கிப் போனான்.

  

அன்று இரவு முழுவதும் அவன் ஒரு நிலையில் இல்லை அதெப்படி காவேரி இன்னொரு திருமணம் செய்துக்கொள்வாள், அதில் அவளுக்கு சம்மதமா அல்லது அவளின் தந்தையின் கட்டாயமா என தெரிந்துக் கொள்ள எண்ணி இரவு நேரம் காவேரியின் வீட்டிற்குச் சென்றான்.

  

அங்கு அவளுக்கும் உறக்கம் வரவில்லை அவளது வீடே கல்யாண வீடு போல அலங்காரம் நடந்துக் கொண்டிருக்க உள்ளே இருக்க பிடிக்காமல் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தாள் காவேரி.

  

கொம்பனோ வீட்டின் அலங்காரத்தை பார்த்தபடியே வந்து காவேரியிடம்

  

”வாழ்த்துக்கள்” என்றான் அவளோ அதைக்கேட்டு அதிர்ந்து அவனைப்பார்த்து வியந்து பேசாமல் நின்றாள் பேச வாய் வரவில்லை.

  

”கல்யாண பொண்ணே, இது உனக்கு எத்தனையாவது கல்யாணம் ம் 7 கல்யாணம் நின்னுப்போச்சி என்கூட 8வதா கல்யாணம் செய்துக்கிட்ட அப்ப இது ஒன்பதாவதா சூப்பரு” என கிண்டலடிக்க அவளோ

  

”என்ன கிண்டலா”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.