(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”சே சே இல்லை உனக்கு கல்யாணம்னு சொன்னாங்க அதான் விசாரிச்சிட்டு அப்படியே வாழ்த்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன், இங்க வந்துப் பார்த்தா வீடே தடல்புடலா ரெடியா இருக்கே, அப்ப நீயும் ரெடிதான் போல, எப்படிதான் இந்த பொம்பளைங்க கழட்டி போடற துணியை போல ஆளுங்களை மாத்தறாங்களோ, இவங்களுக்கு தாலிக்குண்டான மதிப்பே தெரியலை சே சே” என வெறுப்பேற்றுவது போல் பேச அவளுக்கு கோபம் வந்தது

  

”என்னை ஏன் குறை சொல்ற, அங்க மட்டும் என்ன வாழுதாம் உனக்கும் பொண்ணு பார்த்துட்டாங்களாமே“

  

”ஆமாம் உனக்கும் விசயம் தெரிஞ்சிடுச்சா நானே இதை உனக்கு சொல்லலாம்னு இருந்தேன், வர்ற வெள்ளிக்கிழமை எனக்கு கல்யாணம் அவசியம் நீ வரனும் அச்சச்சோ அன்னிக்கிதான் உனக்கும் கல்யாணம்ல உன்னால என் கல்யாணத்துக்கு வரமுடியாது அதே போல என்னாலயும் உன் கல்யாணத்துக்கு வரமுடியாது என்ன செய்யலாம் பரவாயில்லை விடு”

  

”என்னத்த விடறது எப்படி உன்னால என்னை தூக்கி எறிஞ்சிட்டு இன்னொருத்தியோட வாழ முடியும்”

  

”என்ன செய்றது உன்கிட்ட நான் கெஞ்சினேன் நீ வரலை, என்கூட வாழமாட்டேன்னு தீர்த்து சொன்னபின்னாடி என்னால வேற என்ன செய்ய முடியும் உன்கூட கட்டாயமாவா வாழ முடியும்”

  

”சே ஆம்பளைங்களுக்கு பரவாயில்லை ஒன்னு போனா இன்னொன்னுன்னு புது மாப்பிள்ளை கணக்கா ரெடியாயிடுவீங்க பொம்பளைங்க பாடுதான் இங்க திண்டாட்டமா இருக்கு”

  

”உனக்கென்ன காவேரி உங்கப்பா உனக்குன்னு பார்த்து வைச்ச மாப்பிள்ளை கண்டிப்பா என்னை விட நல்லவனா புத்திசாலியா அழகனாதான் இருப்பான்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.