(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பாரு...”

  

சொல்லுங்க மேடம்...”

  

பாரு, உன் கோபம் புரியுது... ஆனால், எனக்கு கொஞ்சம் வேலை...”

  

பவித்ரா பேச்சை முடிக்க விடாமல், கோபத்துடன் குறுக்கிட்டுப் பேசினாள் பாரதி.

  

பொய் சொல்லாத பவி... நீ ஏன் வரலைன்னு எனக்கு தெரியும், அண்ணா சொன்னார்...”

  

பத்திரிக்கை படிப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து சூடாக ஒரு முறை முறைத்தாள் பவித்ரா!!! ரமேஷ் அதை எதிர்பார்த்திருந்ததால், எந்த வித மாற்றமும் இல்லாமல் மனைவியை பார்த்து கண்ணடித்தான்.

  

பல்லைக் கடித்த பவித்ரா, கவனத்தை மீண்டும் பாரதி பக்கம் திருப்பி, அவளை சமாதானப் படுத்த முயன்றாள்.

  

பாரு, அவர் என்ன சொன்னாரோ எனக்கு தெரியாது... அப்படி எல்லாம் எதுவும் இல்லை...”

  

திரும்ப, திரும்ப பொய் சொல்லாதே பவி! உமா உன் கிட்ட என்ன சொன்னாங்க?”

  

எதைப் பத்தி?”

  

இங்கே வீட்டில நடக்குறதைப் பத்தி...??”

  

“...ம்ம்ம்... ஒன்னும் சொல்லலையே பாரு...”

  

திரும்பவும் பொய்! நீ எப்போ இப்படி மாறின பவி? என்னால நம்பவே முடியலை! என்னை விட உமா தான் உனக்கு க்ளோஸாகிட்டாங்க?”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.