(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அழைப்பை எதிர்பார்த்து தான் செல்ஃபோன் சத்தம் காதுக்கு எட்டாததுப் போல அலமாரிக்குள் ஃபோனை வைத்திருந்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே பல மிஸ்ட் கால்கள் வந்து இருந்தன! பாரதி பல முறையும், உமா ஒன்றிரு முறையும் அவளை தொடர்புக் கொள்ள முயன்று இருப்பது புரிந்தது. பாரதியை அழைத்துப் பேசலாமா, வேண்டாமா என்று மனதில் விவாதம் செய்து, குழப்பத்துடன் மீண்டும் வந்து மேஜை அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

   

பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தாலும் மனைவியின் பக்கமும் கவனத்தை வைத்திருந்த ரமேஷ், மனைவியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை கவனிக்க தான் செய்தான்... அவளாகவே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்!

  

🌼🌸❀✿🌷

   

பாரதி, இறந்துப் போன அவளின் பெற்றோர் முதல், இன்று மெது மெதுவாக, கனவாக கலைந்துக் கொண்டிருக்கும் அவளின் திருமண வாழ்வு வரை யோசித்து, கலங்கி தோட்டத்திலேயே சிலையாக அமர்ந்திருந்தாள்! அந்த அமைதியான சூழலை கலைக்க விரும்பியதுப் போல் அவளின் செல்ஃபோன் திடீரென அலறியது! அதை கையில் எடுத்துப் பார்த்தவள், அழைப்பது பவித்ரா என்பதை உணர்ந்து, யோசிக்க ஒரு வினாடி கூட எடுத்துக் கொள்ளாமல் அழைப்பை துண்டித்தாள். அவளுக்கு பவித்ரா மீது கோபம் குமுறிக் கொண்டு இருந்தது!!!!

  

பாரதியின் கோபம் புரிந்து தானோ என்னவோ, பவித்ரா மீண்டும் அழைத்தாள்! மீண்டும் கட் செய்து விடலாமா என்று யோசித்த பாரதி, மனதை மாற்றி கொண்டு ஃபோனை கையில் எடுத்துப் பேசினாள்.

  

ஹலோ...”

  

பாரு, சாரிப்பா இன்னைக்கு ஃபங்க்ஷனுக்கு வர முடியலை...”

  

சரி...!”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.