Page 14 of 21
”இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”
”உன்கிட்ட இங்க யாரு சம்மதம் கேட்டது, நான் தகவலை சொல்லிட்டேன் சரி சரி நான் கிளம்பறேன்“
”இருங்க எந்த ஊருக்குப் போறீங்க“
”ஏன் கேட்கற”
”திருச்சிக்கு ஒண்ணும் போகலையே”
”புத்திசாலிதான் நீ“
”அப்போ அந்த மஹதி வீட்டுக்குப் போறீங்களா”
”ஆமாம்“
“எதுக்குங்கறேன்”
”எதுக்காகவா? மஹதி நம்ம வீட்ல தங்கியிருக்கற விசயத்தை சொல்ல வேணாமா இல்லைன்னா, அவங்க பொண்ணை காணலைன்னு வருத்தப்படமாட்டாங்களா”
”அதுக்கு அவளை கூட்டிட்டுப் போயிடுங்களேன்”
”அது முடியாது, ஒரு முறை அவள் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துட்டா சாகறவரைக்கும் அவள் அங்கதான் இருப்பா”
”யார் சாகறவரைக்கும் நான் சாகறவரைக்குமா”