”அப்படிதான் இருக்கனும், தாத்தாங்கற மதிப்பு உனக்கு இருந்தா எதை பத்தியும் யோசிக்காம தயங்காம இருக்கனும், இன்னும் 2 நாள்ல கல்யாணம் இருக்கு, உனக்கு ஏதாவது பிரச்சனையிருந்தா என்கிட்ட சொல்லு“
”அதெல்லாம் இல்லை தாத்தா ஒரே ஒரு கவலைதான்“
“என்ன கவலை”
”நானும் மாதவியும் இத்தனை நாளும் ஒண்ணாயிருந்தோம், நான் போனபின்னாடி பாவம் அவள் தனியா இருப்பா அதான் கவலையா இருக்கு” என சொல்ல அதைக்கேட்ட மாதவியோ
”என்னை நினைச்சி நீ கவலைப்படாத கண்ணகி, என்னை நான் பார்த்துக்கிறேன் நீ உன்னோட கல்யாண வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பி, நீ சந்தோஷமா இருந்தா அது போதும் எனக்கு” என சொல்ல அதில் தாத்தாவும்
”அப்புறம் என்ன கண்ணகி அதான் உன் தோழியே சொல்லிட்டாளே, அவளை பத்தி கவலைப்படாத நான் அவளை பார்த்துக்கறேன், அடிக்கடி வந்து நீயும் பார்த்துக்க கூடிய சீக்கிரம் அவளுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைச்சிடலாம்” என சொல்ல கண்ணகி முகம் மலர்ந்தாள். ஆனால் மாதவியின் முகம் சூம்பிப் போனது.
அவளின் மனதில் கோவலன் வந்து நின்று சிரித்தான், அவனது நினைவு வந்ததும் அவள் சட்டென அறைக்குள் செல்ல அதை வெட்கம் என தவறாக எண்ணினார்கள் இவர்கள்.
”சரிம்மா நீ எதுக்கும் கவலைப்படாம அடுத்து ஆகவேண்டிய வேலைகளை பாரு ரிசப்ஷனுக்கு காரை வீட்டுக்கு அனுப்பறேன் வந்துடு சரியா” என சொல்ல அவளும் சரியென்றாள்
அவர் அங்கிருந்து சென்றதும் கண்ணகி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள், அவளின் மகிழ்வை காணும் போதெல்லாம் மகிழ்ந்த மாதவியோ அடுத்த கணமே கோவலனை நினைத்து மனம் வருந்தினாள்.