(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

ஆடிட்டோரியமே களை கட்டியது, கண்ணகியோ சிரித்த முகத்துடன் அவர்களின் கைதட்டலை தனக்கான பாராட்டாக ஏற்றுக் கொண்டு

  

”ரொம்ப நன்றி உட்காருங்க” என்றாள் அதில் மாணவர்களும் அமர்ந்தார்கள்

  

”இந்த வெற்றிக்கு நான் மட்டுமில்லை நீங்களும்தான் காரணம், நீங்க மனசு வைக்கலைன்னா இது சாத்தியமில்லை, என்னோட பேச்சை கேட்டு நீங்க படிச்சி பாஸாகியிருக்கீங்க உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும், மிக்க நன்றி” என அவள் சொல்ல அனைத்து மாணவர்களுக்கும் ஆச்சர்யமே, ஒரு பிரின்சிபால் இறங்கிவந்து நன்றி சொன்னதை நினைத்து வியந்தார்கள் அக்கணமே அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.

  

ஈஸ்வரமூர்த்தியும் தன் பங்கிற்குப் பேசினார்

  

”உங்களோட அயராத முயற்சியை கண்டு நான் வியக்கிறேன், வெறியோட படிச்சி பாஸாகியிருக்கீங்க, இது உங்களோட வெற்றி மட்டுமில்லை, என்னோட நம்பிக்கையும் கூட ஒருத்தர் கூட என்னோட நம்பிக்கையை பொய்யாக்கலை சந்தோஷமா இருக்கு, உங்களை நினைச்சா பெருமையா இருக்கு, இந்த கல்லூரியோட பெயரை காப்பாத்திட்டீங்க 100 சதவீதம் தேர்ச்சி வந்திருக்கு, இது மத்த கல்லூரிக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கு ஏன்னா மற்ற கல்லூரிகள்ல அரியர் கூட இருந்திருக்கு, ஆனா நம்ம கல்லூரியில யாருமே அரியர் வைக்கலை நம்ம கல்லூரிக்கு என இருந்த பெயரையும் புகழையும் மறுபடியும் கொண்டு வந்துட்டீங்க ரொம்ப நன்றி” என சொல்ல மாணவர்கள் உற்சாகமானார்கள்.

  

அவர்களுக்கு இந்த பாராட்டுக்கள் பிடித்திருந்தது. அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் அவர்களின் குதூகலம் ஓயும்வரை காத்திருந்தாள் கண்ணகி.

  

மாதவி கூட கண்ணகியைப் பார்த்து

  

”வாழ்த்துக்கள் மேடம்” என்றாள்

  

”உங்களுக்குதான் நான் வாழ்த்துக்கள் சொல்லனும், நீங்க மட்டுமில்லைன்னா இதை சாதிச்சிருக்க முடியாது, எல்லா ஆசிரியர்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்” என

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.