கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.
விளக்கம்
எண்ணித் திட்டமிடாமல் கார்யங்களை செய்யக் கூடாது. நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது. போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது. இரண்டாம் மணம் புரியக் கூடாது. எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது. நெஞ்சே! தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று.
என விளக்கத்தோடு அவளே சொல்லி முடித்தாள்
”நீங்க இன்னும் மென்மேலும் சாதிக்கனும், வாழ்த்துக்கள் இப்ப நீங்க எல்லாரும் உங்க வகுப்புகளுக்குப் போகலாம்” என சொல்ல மாணவர்களும் ஒழுங்காக தங்கள் வகுப்புக்குச் சென்றார்கள். ஆசிரியர்களும் வகுப்பில் பாடம் எடுக்கச் செல்ல மாதவி கண்ணகியிடம் வந்த நேரம் கண்ணகி ஈஸ்வரமூர்த்தியிடம்
”நான் போய் என் வேலைகளை பார்க்கிறேன் சார்” என சொல்ல அவரோ
”ஆமாம் எனக்கும் முக்கியமான வேலையிருக்கு இந்த கோவலன் எங்க இருக்கான்னு தெரியலை, கல்லூரியில இவ்ளோ பெரிய விசயம் நடந்திருக்கு ஆனா அவன் இங்க இல்லை அவனை தேடி போறேன்” என சொல்ல கண்ணகியின் முகம் பூவாய் மலர்ந்தது, கோவலன் என்றதும் அவளின் முகம் பிரகாசமாவதை கவனித்த மாதவியின் முகம் கருத்துவிட்டது.