Page 6 of 21
ஈஸ்வரமூர்த்தி கோவலனை தேடிச் செல்ல கண்ணகியோ மாதவியிடம்
”மாதவி என்ன வகுப்புக்கு போகலையா”
”போகனும் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்“
”என்ன அது”
”கோவலனை பத்தி”
”அவரை பத்தி என்ன பேசனும்”
”உன் மனசுல என்ன இருக்குன்னு”
”புரியலை”
”ப்ச் இல்லை நீ கோவலனை பிடிக்கும்னு சொன்னல்ல ஒருவேளை கோவலன் மனசுல வேற ஒரு பொண்ணு இருந்தா என்ன செய்வ”
”அப்படியா உனக்கு எப்படி தெரியும்”
”இல்லை எனக்குத் தெரியாது நான் சும்மா அப்படி கேட்டேன்“
”தெரியலை அப்படியிருந்தா எதுக்காக ஈஸ்வரமூர்த்தி சார் என்னை அவர் பேரனுக்காக பேசி வைக்கனும்”
”ஒருவேளை அவருக்கு விசயம் தெரியாம இருக்கலாம்ல”
”அதான் இப்ப அவரை தேடிபோறார்ல பார்த்துக்கலாம்”