”கோவலன் மனசுல வேற யாராவது இருந்தா என்ன செய்வ கண்ணகி”
”என்ன செய்றது மனசுல ஒருத்தரை வைச்சிக்கிட்டு இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்கிட்டு வாழற வாழ்க்கை நரகம் போல, அந்த தப்பை நானே செய்ய மாட்டேன், அப்படியிருக்கறப்ப கோவலன் செய்யவும் நான் சம்மதிக்க மாட்டேன் போதுமா, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நாம இந்த விசயத்தை பத்தி வீட்ல பேசிக்கலாம், இது காலேஜ் நீ உன் வகுப்புக்கு போ” என சொல்ல மாதவி அரைமனதுடன் தன் வகுப்பு நோக்கிச் சென்றாள்.
கண்ணகிக்கோ மாதவியின் பேச்சில் சற்று சலனம் ஏற்பட்டது, கோவலனை நினைத்து குழம்பினாள்.
கோவலனோ கல்லூரியின் நிலைமையை அறிந்ததும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டான், கவலையுடன் இருந்தான் அவன் வேண்டிய வேண்டுதல் நிறைவேறாமல் போய்விட்டது, அதை நினைத்து அனைத்து கடவுளையும் திட்டிவிட்டான், இனி தாத்தாவை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் ஓடி ஒளிய ஈஸ்வரமூர்த்தி அவனை கண்டுக்கொண்டார். தாத்தாவின் முன் பயந்தபடி நின்றான் கோவலன்
”கல்லூரியில எல்லா மாணவர்களும் பாஸாயிட்டாங்க, இந்த விசயம் உன் காதுக்கு எட்டியிருக்கும்னு நினைக்கிறேன் சரிதானே” என கேட்க அவனிடம் பதில் இல்லை திருதிருவென விழித்தான்
”நான் சொன்னது சொன்னதுதான், பந்தயத்தில நீ தோத்துட்ட அதனால நாம பேசி வைச்ச மாதிரி நீ கண்ணகியைதான் கல்யாணம் செய்துக்கனும்” என சொல்ல அவனோ துடித்துப் போனான்
”சத்தியமா என்னால முடியாது தாத்தா“
”இதப்பாரு பேச்சை மாத்தக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன், மாணவர்கள் எப்படியிருந்தாலும் பெயில் ஆவாங்கன்னு நீதான் தப்பு கணக்கு போட்டு திமிரா அலைஞ்ச,