(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

சும்மா விடக்கூடாது அவளை வாழவே விடக்கூடாது, செய்றேன் ஏதாவது செஞ்சி அவளை ஒழிச்சிக் கட்டறேன்” என கிரிமினலாக யோசிக்கலானான்.

  

அனைவரும் எதிர்பார்த்த ரிசல்ட் வந்தது, அன்று கோவலன், மாதவி, ஈஸ்வரமூர்த்தி, கண்ணகி என நால்வரும் ஆர்வமாக இருந்தார்கள். கண்ணகியின் கடின உழைப்பும் நம்பிக்கையும் வென்றது, பார்டர் மார்க்கே எடுத்தாலும் அனைத்து மாணவர்களும் பாஸாகியிருந்தார்கள் ஒருவர் கூட அரியர் வைக்கவில்லை, அதைக்கண்டு கண்ணகிக்கு நிம்மதியாகிப் போனது. மாதவிக்கும் மகிழ்வாக இருந்தது, ஈஸ்வரமூர்த்திக்கு ஒரே குதூகலம் ஆனால் கோவலனுக்கு மட்டும் தலையில் இடி விழுந்தது போலானது.

  

ஈஸ்வரமூர்த்தி கண்ணகியிடம்

  

”நீ சாதிச்சிட்ட உன்னை நான் நம்பினேன், பலகட்டமாக வந்த பிரச்சனைகளுக்கு நடுவில நீ பாடுபட்டு எல்லா மாணவர்களையும் படிக்க வைச்சி பாஸாக்கிட்ட, இது போதும்மா எனக்கு சந்தோஷமா இருக்கு”

  

”எனக்கும்தான் சார், என்னை நம்பி தந்த பொறுப்பில எந்த பிரச்சனையும் இல்லாம பார்த்துக்கிட்டேன், மாணவர்கள் துணை இருந்ததாலதான் என்னால சாதிக்க முடிஞ்சது, இந்த வெற்றிக்கு முழு காரணம் நான் மட்டுமில்ல மாணவர்களும்தான் சார், அவங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்”

  

”நானும்தான்”

  

”இப்பவே நான் எல்லாரையும் ஆடிட்டோரியத்துக்கு வரவழைக்கிறேன்“ என சொல்லிய கண்ணகி அந்த வேலையை ப்யூனிடம் தர அவன் கச்சிதமாக அந்த வேலையை செய்து முடித்தான்.

  

ஆடிட்டோரியத்தில் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், அவர்களுக்கே ஆச்சர்யம் நம்மாலும் முடிந்ததே என்று, இத்தனைக்கும் பாஸ் மார்க்தான் எடுத்தார்கள் அதுவே 100 மார்க் எடுத்தது போல கர்வம் கொண்டார்கள், ஈஸ்வரமூர்த்தியும் கண்ணகியும் உள்ளே வந்ததும் அனைத்து மாணவர்களும் மரியாதையாக எழுந்து நின்று கைதட்டினார்கள், அந்த

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.