(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

சத்யா சொன்னதை ஏற்றுக் கொண்டு தலை ஆட்டிய அஹல்யா, “நான் முன்னாடி தங்கி இருந்த வீட்டு சாவியை சேகரன் தான் எனக்கு கொடுத்தான்,” என்றாள்.

  

“அந்த வீட்டு அட்ரஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சது? சேகரன் அங்கே இருப்பான்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”

  

“இல்லைங்க சக்தி. வீட்டு அட்ரஸ் என் கிட்ட இருந்துச்சு. அவனை பத்தி எதுவும் தெரியாது. நானும் அருணும் வந்தப்போ அவன் அந்த வீடை பெருக்கி சுத்தம் செய்துட்டு இருந்தான். நான் வரதுக்கு முன்னாடி கிளீன் செய்து முடிக்கனும்னு நினைச்சதா சொன்னான்!”

  

“ஓகே! அஹல்யா, நல்ல பொறுமையா யோசிச்சு நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க. இந்த சேகரனோ, உங்களுக்கு அந்த வீட்டு அட்ரஸ் கொடுத்தவங்களோ உங்க கிட்ட வேற ஏதாவது பேப்பர், டாக்குமென்ட் இப்படி எதையாவது கொடுத்தாங்களா?”

  

அஹல்யா யோசித்தாள்.

  

“நல்லா யோசிங்க அஹல்யா. ஏதாவது பேப்பர்???”

  

“ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்துச்சுங்க. அட்ரஸோட அதையும் என் கிட்ட கொடுத்தாங்க. நான் அதுல என்ன இருக்குன்னு பார்க்கவே இல்லை.”

  

“அந்த கவர் எங்கே? எடுத்துக் கொடுங்க அஹல்யா!”

  

“அது என் கையில இல்லை. இம்பார்டன்ட் பொருளை மட்டும் இங்கே எடுத்துட்டு வந்தேன். மீதி எல்லாம் அந்த வீட்டுலேயே தான் இருக்கு.”

  

"அந்த வீட்டுலேயா??? இப்போ திருட்டு நடந்துச்சே அப்போ..."

   

"இல்லைங்க சக்தி, அது அங்கேயே தான் இருக்கு!"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.