சந்தோஷமா வாழமுடியாது இப்படியொரு வாழ்க்கை உனக்கு தேவையா சொல்லு”
”எனக்கு மூர்த்தி மாமா வேணும், இப்ப வேணா அவர் என்னை வெறுக்கலாம் கல்யாணம் ஆன பின்னாடி கொஞ்ச நாள் கழிச்சி அவர் என்னை ஏத்துக்குவாரு, எனக்கு நம்பிக்கையிருக்கு அத்தை“
”நீயும் உன் நம்பிக்கையும் அவனாலயே நீ மோசம் போகப் போற பாரு, கடைசியில அவனும் இல்லாம என் மகனும் இல்லாம தங்க இடம் இல்லாம நடுத்தெருவில நீ நிக்கறப்பதான், நீ செய்தது எவ்ளோ பெரிய தப்புன்னு தெரிஞ்சிக்குவ, அதுவரைக்கும் என்ன ஆட்டம் ஆடனுமோ ஆடிப்பாடு” என சொல்லி மகனுக்காக போட்டு வைத்த டீயை கையில் எடுத்தார். அதை வாங்க வந்தவளை தடுத்தார்
”இருடி நீ என்ன இந்த வீட்டு மருமகளா வெறும் விருந்தாளிதான் ஒதுங்கிப் போ” என திட்ட ஜானகி முதல் முறை மங்களத்தின் வெறுப்பைக்கண்டு வியந்தாள்.
எப்போதும் மகாராணி போல தன்னை தாங்குபவரா இப்படி வெறுப்பாக பேசுவது என நினைத்தாள்.
”சின்ன மருமகளே சின்ன மருமகளே” என மங்களம் அழைக்க மஹதியும் என்னவென வந்து நின்றாள் அவளிடம் டீயை நீட்டி
”இந்தாம்மா இதை வேங்கைகிட்ட கொடு போ” என சொல்ல அவளோ தயங்கி ஜானகியை ஒரு முறை பார்த்துவிட்டு மங்களத்திடம்
”ஆனா அவர் ஜானுகிட்டதான் டீ கேட்டாரு நான் தந்தா வாங்க மாட்டாரு அத்தை”
”நான் சொன்னதை செய் இந்த டீ கொண்டு போய் கொடு, அவன் குடிச்சாலும் சரி குடிக்காட்டி போனாலும் சரி கவலையில்லை, ஆனா அவனுக்கு செய்ய வேண்டியதை நீ மட்டும்தான் செய்யனும், எத்தனை நாளுக்கு அவன் பட்டினி கிடப்பான்னு நானும் பார்க்கிறேன், எப்படியிருந்தாலும் பசி எடுத்தா தன்னால அவன் மனசு மாறி நீ தர்றதை வாங்கி சாப்பிடுவான்,