(Reading time: 24 - 47 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”என்னடி என்ன புதுசா நாடகமாட வந்தியோ, முன்னல்லாம் அவன் வாய் வலிக்க கத்தி கூப்பிட்டா கூட என்னன்னு கூட எட்டிப்பார்க்க மாட்ட, இப்ப அவன் இரண்டு முறை உன் பேரை வைச்சிக் கூப்பிட்டதும், உடனே போய் நிக்கற அசிங்கமாயில்லை உனக்கு” என திட்ட

  

”இதப்பாருங்க அத்தை நான் ஒண்ணும் அவர் மேல ஆசைப்பட்டு வரலை, நைட் தங்கறதுக்கு இடம் இல்லாம அலைஞ்சப்ப எனக்கு அவர் உதவி செய்தாரு, அந்த நன்றிக்காக அவர் கூப்பிட்டதும் போய் நின்னேன், டீ கேட்டாரு போட வந்தேன் அவ்ளோதான்”

  

”தங்க இடம் இல்லைன்னா இங்கதான் வரனுமா, இது என்ன சத்திரமா சாவடியா உன் அப்பா அம்மா வீடு இருக்குல்ல அங்க போறதுதானே”

  

”அவங்க என்னை சேர்த்துக்க மாட்டாங்க அதான்”

  

”சேர்த்துக்கலைன்னா என்ன உனக்குன்னு சொந்தக்காரங்க வீடு இருக்குல்ல அங்க போய் தங்கறது”

  

”நடந்த விசயத்தில யாரும் என்னை சேர்த்துக்க மாட்டாங்க அத்தை”

  

”இப்பவாவது புரிஞ்சதா உன் நிலைமை எவ்ளோ மோசமாயிருக்குன்னு இப்பவாவது திருந்து”

  

”திருந்த என்ன இருக்கு, நான் தெளிவாதான் இருக்கேன், மூர்த்தி மாமா ஊருக்கு வந்ததும் நான் அவர் வீட்டுக்குப் போயிடுவேன்“

  

”அடியேய் அறிவில்லாதவளே, இன்னுமாடி நீ அவனை நம்பற, அவன் உன்னை ஏமாத்தறான், புரியலையா உனக்கு”

  

”புரியுது அதுக்காக அவரை என்னால விட்டுக்கொடுக்க முடியாது”

  

”ஏன்டி விருப்பமில்லாம நீ எப்படி வேங்கையனோட வாழ முடியாம கஷ்டப்பட்டியோ அதே போல உன்கூட விருப்பமில்லாம மூர்த்தியும் வாழமுடியாம கஷ்டப்படுவானே, உன்னாலயும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.