”அதுக்கு என்ன செய்றது”
”பேசாம நாம இவங்களோட கிளம்பி காரைக்குடி போய் வரலாம் அங்க போன பின்னாடி நடக்கறதை பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்”
”அப்படியா சொல்றீங்க”
”ஆமாம், பயணத்துக்கு தேவையான உடைகளை எடுத்து அடுக்கிக்குங்க, நாம எல்லாரும் கார்லயே போய் வரலாம்” என சொல்ல சாந்தியும் உடைமைகளை அடுக்கச் சென்றார்
பொழுது விடிந்ததும், வீரசிங்கம் உறக்கம் கலைந்து எழுந்தார். பக்கத்தில் மூர்த்தி அவருக்கு முன்னாலேயே எழுந்து குளித்து முடித்து ரெடியாக இருந்தான் அதைக்கண்டவர்
”என்னடா ஊருக்கு கிளம்பிட்ட போல”
”ஆமாம் நான் மட்டும் இல்லை நீங்களும்தான்”
”நானுமா“
”ஆமாம் இப்பதான் மஹதியோட அம்மா வந்து பேசினாங்க, அவங்களும் நம்மளோட ஊருக்கு வராங்களாம்”
”அப்படியா அப்ப ரொம்ப நல்லதா போச்சி கண்டிப்பா நான் நினைச்சதுதான் நடக்கும்“
”அப்படி நடக்க நான் விடமாட்டேன்“
”அதையும் பார்த்துக்கலாம்” என சொல்லிவிட்டு அவரும் குளித்து முடித்து ரெடியாகி வந்தார்.
மகேந்திரனும் சாந்தியும் இவ்விருவருக்கும் டிபன் பரிமாறி தாங்களும் சாப்பிட்டு முடித்து