”சார் இப்போதைக்கு தாத்தாவை காப்பாத்தனும், அதுக்கு உங்ககிட்ட ஏதாவது வழியிருக்கா”
”இல்லையே இருந்தா நான் சும்மாயிருப்பேனா“
”அந்த வழிதான் இப்ப நமக்கு கிடைச்சிருக்கு புரிஞ்சிக்குங்க சார் ப்ளீஸ்” என கெஞ்ச உதயமூர்த்தியும் அமைதியானார்.
கண்ணகியோ சிலம்புவிடம்
”நீ கேட்டது கிடைக்கும் இப்பவாச்சும் சொல்லு கோவலன் எங்க இருக்காரு”
”மாதவி வீட்ல அவள்கூட காதல் செய்றாப்ல” என சொல்ல கண்ணகிக்கு உலகமே இருண்டது.
”மாதவியா” என அதிர்ச்சியுடன் கேட்க அவனோ சிரிப்புடன்
”ஆமாம் மாதவிதான்” என சொல்ல உதயமூர்த்தியோ
”யாரு கல்லூரியில வேலை பார்த்த ஆசிரியையா” என கேட்க அதற்கு சிலம்புவோ
”அவங்களேதான் இதோ நிக்கறாங்களே கண்ணகி இவங்களோட உயிர் தோழி, கல்லூரிக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே இவங்க பல வருஷமா நட்பா இருந்தவங்க, ஒரே வீட்ல வாழ்ந்தவங்க இப்ப அந்த வீட்ல கண்ணகியில்லாததால கோவலன் மாதவியோட இருக்காப்ல, அதுவும் எப்படி காதல் போதையில பித்து ஏறி தனக்கு கல்யாணம் ஆனதை கூட மறந்துட்டு வாழறாரு, இதுல என்ன கூத்துன்னா பாவம் கண்ணகிக்கு மாதவியை பத்தி ஒண்ணுமே தெரியலை, அவள் சதிகாரின்னு கூட தெரியாம இருக்காங்க” என சொல்ல கண்ணகிக்கு தலை சுழற்றியது.
அவள் தன் தலையை அழுத்தமாக கையால் பிடித்துக் கொண்டு சில நொடிகள் தன்னை சுதாரித்துக் கொண்டு அவனைப் பார்த்து