(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

கோபத்தை அதிகரிக்க வைத்தது. பற்களை நறநறவென கடித்தார், அந்தச் சத்தம் கேட்டு நாச்சியா கலகலவென சிரிக்க அதில் அவரின் பொறுமை ஓடியேவிட்டது

  

”யார் நீ”என கேட்க அவளோ தைரியமாக

  

”நாச்சியா ஆண்டாள் நாச்சியா” என்றாள் கெத்தாக அதைக் கேட்டதும் சங்கமேஸ்வரனின் கோபம் தணிந்து குழப்பம் வந்தது

  

”எந்த வீதியை சார்ந்தவ”

  

”எல்லா வீதியும் ஒண்ணுதான்”

  

”பதில் சொல்லு நீ எந்த வீதியை சார்ந்தவ”

  

”பார்த்தா தெரியலையா“

  

”மேலவீதியா”

  

”சே சே அங்கலாம் திமிருபிடிச்ச வடிகட்டின முட்டாளுங்கதான் இருப்பாங்க, நான் இருக்கறது இரக்கமுள்ள விசுசாமான மக்கள் இருக்கற கீழவீதியை சார்ந்தவ” என சொல்லவும் அவருக்கு குழப்பம் நீங்க அச்சம் சூழ்ந்தது. அதற்கு மேல் பேச வாய் வராமல் போக உடனே காரிடம் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஓட்டலானார். வண்டி மறையும் வரை நாச்சியா பார்த்தபடி இருந்தாள் சுற்றியிருந்த மக்களில் ஒருவரோ

  

”உனக்கு ரொம்பதான் துணிச்சல் அதிகம், பெரிய ஐயா கிட்டயே நக்கலா பேசிவைக்கற, அவரு யாருன்னு நினைச்ச”

  

“யாரு சங்கமேஸ்வரன்தானே”

  

”ஓ தெரிஞ்சிதான் அவர்கிட்ட நக்கலா பேசினியா”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.