அவளை நல்லபடியா பார்த்துக்கனும் அவள் வருத்தப்பட்டா உன்னை கொன்னுடுவேன்“
”சே சே அப்படி எதுவும் நடக்காது, எனக்கு அவள் மேல பாசம் இல்லைன்னா என்ன அதான் அவளுக்கு என் மேல பாசம் கொட்டிக்கிடக்கே, எல்லாம் கல்யாணம் ஆன பின்னாடி போக போக நான் மாறுவேன், இல்லைன்னா எனக்கு ஏத்த மாதிரி அவள் மாறிக்க போறா அவ்ளோதானே” என்றான் இயல்பாக அதைக்கேட்டு
”எது எப்படியோ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா அது போதும் எனக்கு”
”அப்ப உன் வாழ்க்கை” என கேட்க அவனோ அமைதியாக
”ஓ மஹதியிருக்காள்ல”
”அவள் எனக்கு தேவையில்லை”
”நீ சொன்னா ஆச்சா உன் வீட்ல நடக்கறதை பார்க்கறல்ல”
”என்ன நடந்தாலும் தாலி கட்டப்போறது நானு, என் அப்பா அம்மா சொந்தபந்தம் இந்த ஊரு ஏன் கடவுளே வந்து சொன்னாலும் நான் மனசு மாறமாட்டேன், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இன்னொரு கல்யாணம் செய்துக்க மாட்டேன் அவ்ளோதான்”
”என்னவோ அது உன்னோட வாழ்க்கை உன் விருப்பம்”
”உனக்கும் ஜானகிக்கும் கல்யாணம் ஆனபின்னாடி நான் உங்க வாழ்க்கையில என்னிக்குமே நுழைய மாட்டேன்“
”அது இருக்கட்டும் உங்களுக்குள்ள ஒண்ணும் நடக்கலைல்ல” என கேட்க அதைக்கேட்டு திடுக்கிட்டான் வேங்கையன்
”என்னடா பேசற உனக்குதான் எல்லாம் தெரியும்ல”