”ப்ச் எதுக்கு சங்கடப்படற, உங்களுக்குள்ள எதுவும் நடந்திருக்காதுன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு, அப்படியே நடந்தா என்ன ஒண்ணும் தப்பில்லை நான் பார்த்துக்கிறேன், உன் சொத்தை சீக்கிரமா என் பேர்ல மாத்திடு சரியா” என சொல்ல வேங்கையன் சரியென தலையாட்ட மூர்த்தி ஜானகியைப் பார்த்து
”வா ஜானகி நம்ம வீட்டுக்குப் போகலாம்” என அவளின் கையை பிடிக்க வந்ததே கோபம் அவளுக்கு, பளார் என ஒரு அறைவிட்டாள் அதில் கதிகலங்கிப் போனான் மூர்த்தி
”பாவி சொத்துக்காகதான் என்னை நீ ஏத்துக்குவியா, அப்போ இத்தனை வருஷமா நீதான் உலகம்னு இருந்தேனே என் மனசை நீ ஏத்துக்கலை, மனுஷனா நீ, உன்னை புருஷனா நினைச்சி வாழ்ந்தேனே உன் மேல உசுரையே வைச்சிருந்தேனே, அதெல்லாம் உனக்கு தெரியலை எனக்கு கல்யாணம் ஆயிருந்தா கூட என் நிழலைகூட யாரையும் தொடவிட்டதில்லை, அந்தளவுக்கு கற்போட வாழ்ந்தவளை போய் கொச்சைப்படுத்திட்டியே, என்ன சொன்ன, எங்களுக்குள்ள எது நடந்திருந்தாலும் பரவாயில்லை நீ என்னை ஏத்துக்கறியா, இது எதுக்கு சொத்துக்காகதானே, சே உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சி ஆசைப்பட்டேனே, என்னைச் சொல்லனும்”
”இதப்பாரு ஓவரா சீன் போடாத, கல்யாணம் ஆனபின்னாடி கூட என்கிட்ட பழகினியே நீ என்ன கற்புக்கரசியா”
”ஆமாம் கற்புக்கரசிதான் உன்னையே நினைச்சி உன்கூட வாழனும்னு நினைச்சவ அதனாலயே தொட்டு தாலிகட்டினவனை கூட வேத்தாளா பார்த்து ஒதுக்கினவ, கனவுல கூட நான் உன்னை உயர்வாதான் நினைச்சிருந்தேன், ஆனா இப்படி பேசிட்டியே”
”இப்ப என்னங்கற, ஆமாம்டி உன் சொத்துக்காகதான் உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டேன், இந்த விசயம் உன் அப்பனுக்கும் தெரியும் சொத்துக்காக பொண்ணை கட்டிக்க வந்தவன் எப்படி பொண்ணை கண்கலங்காம வைச்சிக் காப்பாத்துவான்னு பயந்து உன்னை வேங்கையனுக்கு கட்டிவைச்சாங்க