”அதுக்குன்னு இப்படியா இவளை தவிக்க விட்டுப் போவ”
”அதுக்கு நான் என்ன செய்றது, அதான் எல்லா சொத்தும் அவளுக்கு வந்துடுச்சே இருக்கற பணத்தை வைச்சி அவள் வாழட்டும்“
”முட்டாள் பணம் இருந்தா போதுமா அது அவளுக்கு துச்சம் நீதான் அவளோட வாழ்க்கையே”
”என்னால முடியாது அங்கிள்”
”தப்பு செய்யாத கோவலா நீ எடுக்கற முடிவால பாதிக்கப்படறது 2 பெண்களோட வாழ்க்கைதான்“
”பாதிப்பா அப்போ என்மேல உங்களுக்கு இரக்கம் வரலையா”
”வரலை நிச்சயமா வரலை, இங்க பாரு, நீ ஆசைப்பட்டா போதுமா மாதவியும் உன்கூட வாழனும்னு ஆசைப்படனும் ஆனா அவளுக்கு அந்த ஆசையில்லை”
”அவள் என்னை விரும்பறா”
”அதை அவள் வாயால சொல்லச் சொல்லு பார்க்கலாம்”
“அவள் பயப்படறா கண்ணகியை பார்த்து”
”கண்ணகி என்ன சிங்கமா புலியா, இந்த சமாளிப்புதான் வேணாம்ங்கறது, மாதவி தெளிவா இருக்கா அவளுக்கு உன்கூட வாழ விருப்பமில்லை, நீயாதான் அவளை பிடிச்சி வைச்சிருக்க அவளை விடு” என சொல்ல கோவலன் அதிர்ந்து மாதவியைப் பார்த்து
”மாதவி உனக்கு என்கூட வாழ விருப்பமில்லையா” என கேட்க அவளோ வாய் திறந்தாள்
”ஆமாம்“