எப்படியோ என் மகளை நான் காப்பாத்திட்டேன், எல்லை மீறி ஏதாவது ஆபத்து நடக்கறதுக்குள்ள நாங்க இங்கிருந்து போறதுதான் நல்லது” என சொல்ல வீரசிங்கத்திற்கு பேச்சே இல்லை
மஹதி செல்வதைக்கண்டு உண்மையில் துடித்துப் போனான் வேங்கையன், ஆனால் அவனால் துடிக்க முடிந்ததே தவிர அவளை அழைக்க வாய் வரவில்லை, அவளும் வேங்கையனைப் பார்த்தாள், அதற்குள் ஜானகி வேங்கையன் பக்கம் நின்றிருக்க அவர்களின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து மென்மையாக சிரித்து
”உங்க ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு” என வார்த்தைகளை மெதுவாக உச்சரித்துவிட்டு அடுத்த நொடியே முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மகேந்திரனும் தன் மகளின் வேதனையை புரிந்துக் கொண்டு அவளையும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
வீரசிங்கம் நின்ற இடத்திலேயே மனம் உடைந்து அமர்ந்துவிட மங்களத்தின் அறையில் ஏதோ ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டதும் அரண்டுப் போனார்
”மங்களம் மங்களம்” என அலறிக் கொண்டு ஓட வேங்கையனும் ஓடினான் ஜானகியும் பதட்டமாகி என்னவென காணச் சென்றாள்.
மங்களமோ தனது அறையில் தூக்கு மாட்டிக் கொள்ள ஆயத்தத்தில் இருக்க நல்லவேளையாக வீரசிங்கம் அவரை பிடித்துக் கொண்டார், வேங்கையனோ தூக்கு கயிறை அவிழ்த்துவிட்டு
”அறிவிருக்காம்மா உனக்கு இப்படியா செய்வ” என திட்ட அதற்கு மங்களமோ
”மானம் மரியாதை போயிடுச்சி, கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலை இதுக்கு மேல இந்த உடம்புல உசுரு இருந்தா என்ன போனா என்ன” என விரக்தியாக பேச அவன் புரிந்துக் கொண்டான்.
ஜானகிக்கு ஒரு மாதிரியாகிப் போனது