(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

இதுதான் என் வாழ்க்கை எனக்கு அந்த மூர்த்தி வேணாம் மாமா, இனிமேல நாம சேர்ந்து வாழலாம்” என சொல்லி அவனை கட்டியணைத்துக் கொள்ள அவனுக்கு அது பிடிக்கவில்லை

  

மஹதி கட்டியணைத்த போது இருந்த நிம்மதி மகிழ்ச்சி ஜானகி கட்டியணைக்கும் போது இல்லை அதற்கு பதிலாக உடல் கூசியது, சட்டென அவளை விட்டு விலகி நின்றான், அந்நேரம் மங்களம் வந்தார் தடாலடியாக

  

”ஓஹோ கட்டிப்பிடிக்கற அளவுக்கு வந்தாச்சா” என கத்த அவனோ திடுக்கிட்டு

  

”அம்மா என்னம்மா பேசற, அது வந்து சும்மா அவள் ஆறதலுக்காக அப்படி வந்து ஆமா” என உளற

  

”நிறுத்துடா எப்படி உன்னால இப்படி அநியாயம் செய்ய முடிஞ்சது”

  

”நான் என்னம்மா செய்தேன்”

  

”என்னவா யார்டா இவ” என ஜானகியைப் பார்த்து கேட்க வேங்கையன் சட்டென

  

”என் பொண்டாட்டி” என சொல்லி அடுத்த நொடி தன் நாக்கை கடித்துக் கொண்டு தவித்துப் போக அதைக்கேட்ட ஜானகி முகம் மலர இருவரின் முகத்தையும் கண்டு வெறுத்த மங்களமோ கோபத்தில் தன் செல்ல மகனை பிடித்து அடி அடி என தோளிலும் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார்.

  

அவர் அப்படி செய்ய செய்ய வேங்கையன் தடுக்கவில்லை, தவறிழைத்துவிட்ட காரணத்தால் தண்டனை கைதி போல நின்றிருந்தான், ஜானகி மட்டும் துடித்துப் போனாள்

  

”அத்தை என்ன செய்றீங்க அத்தை அவரை ஏன் அடிக்கறீங்க அத்தை நிறுத்துங்க” என கத்தினாள் மங்களத்தின் கோபம் குறையவில்லை, அதில் ஜானகியே அவரை பிடித்து இழுத்து நிப்பாட்ட அதில் மங்களம் ஜானகியை தட்டிவிட்டார்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.