”எல்லாம் இருக்கற முகத்தை வைச்சிக்கிட்டுதான் வந்திருக்கேன், உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது, உன்னைப் பார்த்து பயந்து ஓடின காலம் எல்லாம் மலை ஏறிடுச்சி”
”ஓஹோ அவ்ளோ தூரம் ஆயிடுச்சா, பழைசெல்லாம் மறந்துட்டியா, இப்ப நான் நினைச்சா கூட நோட்டீஸ் போர்டுல கோவலனும் மாதவியும் அவங்களோட காதல் எல்லாம் எழுதி வைச்சிடுவேன், மொத்த மாணவர்களும் பார்த்தா மானமே போயிடும் செய்யட்டுமா செய்யட்டுமா” என கத்த அவளோ வெகுஇயல்பாக
”என்கிட்ட ஏன் அனுமதி கேட்கற போ போய் புது பிரின்சிபால் கிட்ட அனுமதி கேளு”
”எது புது பிரின்சிபாலா ஓஹோ என் இடத்தில இன்னொருத்தனை உட்கார வைச்சிட்டியா, அவ்ளோ திமிராயிடுச்சா உனக்கு, இரு இரு இப்பவே புது பிரின்சிபாலை விரட்டிட்டு நோட்டீஸ் போர்டுல நான் சொன்னதை எழுதி வைக்கிறேன் பாரு”
”எனக்கு பார்க்க நேரமில்லை, ஏகப்பட்ட வேலைகள் பென்டிங்ல இருக்கு, நீ என்ன செய்யனும்னு நினைக்கிறியோ செய்துக்க, எனக்கு கவலையில்லை போ வெளிய” என ஒரே போடாக போட அதில் அவன் அரண்டுப் போய் கோபத்துடன் வெளியேறி நேராக பிரின்சிபால் அறைக்கு தடாலடியாக நுழைந்தான்.
அங்கு கோவலன் அமர்ந்திருப்பதைக்கண்டு இவன் பயந்தான்
”நீயா”
”வாடா துரோகி வா வா” என கோவலன் அழைக்க அவனோ கலவரமானான்
”நீ எப்படி இங்க புது பிரின்சிபால் எங்க”
“நான்தான் அது, ஏன் என்னைப் பார்த்தா பிரின்சிபால் போல தெரியலையா”
”இல்லை அது நீதான் எல்லாத்தையும் விட்டுட்டு போன திரும்பி ஏன் வந்த”