அவளுக்கு அகத்தியன்னு பேசி முடிவு பண்ணிட்டோம், நீங்க ரெண்டு பேரும் பெரியவங்களானதும் கல்யாணம் செய்து வைக்கனும்னு வாக்கும் கொடுத்துக்கிட்டோம், இப்படி கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாம செய்துட்டியேடா”
”அத்தை புரிஞ்சிக்குங்க நீங்க வாக்கு கொடுத்த காரணத்துக்காகலாம், என்னால உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது”
”ஓஹோ என் பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது, அவள் யாரோ கீழவீதி பொண்ணு அவளை மட்டும் நீ கல்யாணம் செய்துக்குவியா”
”அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு அத்தை, பாவம் அந்த பொண்ணு நாச்சியா என்னை காப்பாத்த போய் சதியில மாட்டிக்கிட்டா, நான் அவளை காப்பாத்தலைன்னா ஊர் மக்கள் ஒண்ணு கூடி அவளை ஊருக்கே நேர்ந்துவிட்டிருப்பாங்க, அப்புறம் அவளோட எதிர்காலம் பாழாயிருக்கும் அத்தை, என்னால அவள் பாதிக்க கூடாதுன்னு நினைச்சி காப்பாத்தினேன்“
”எப்படி அவளை கல்யாணம் செய்துதான் நீ காப்பாத்தனுமா“
”அந்தச் சமயம் எனக்கு வேற வழி தெரியலை அத்தை, நான் அவளை கல்யாணம் செய்துக்கிட்டாதான் அவளை ஊர்கிட்டயிருந்து காப்பாத்த முடியும்ங்கற நெருக்கடியில அவளை கட்டிக்கிட்டேன் மத்தபடி அவள் மேல எனக்கு எந்த விருப்பமும் இல்லை அத்தை”
”விருப்பம் இல்லையா சரி போனது போகட்டும் அவளை காப்பாத்தானே கல்யாணம் செய்துக்கிட்ட வேற ஆசை எதுவும் இல்லையே அவள் மேல உனக்கு”
“சீ சீ சத்தியமா இல்லை அத்தை“
”அப்ப நல்லாதாப் போச்சி அவளுக்கு கணிசமான ஒரு தொகையை கொடுத்து எங்கயாவது வேற ஊருக்கு அனுப்பிடு, அடுத்த வர்ற முகூர்த்தத்தில நீ என் பொண்ணை கல்யாணம் செய்துக்க”