(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”அய்யோ அத்தை நான் என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டீங்க, இனி உங்ககிட்ட பேசறது என் தப்பு போங்க போய் அப்பாவையும் தாத்தாவையும் பார்த்துக்குங்க, நான் வீடு வரைக்கும் போய் வரேன்“

  

”வீட்டுக்கா எதுக்கு”

  

”பாவம் அத்தை அந்த பொண்ணு தனியா வீட்ல இருக்கா சாப்பிட்டாளா இல்லையான்னு கூட தெரியலை, என்னை நம்பி வந்தவளை நான்தானே அக்கறையா பார்த்துக்கனும்”

  

”இது சரியில்லை அகத்தியா, நீ செய்றது தப்பு, அவளை காப்பாத்த கல்யாணம் செய்த அதோட முடிஞ்சது, அவள் சாப்பிட்டாளா தூங்கினாளான்னு பார்க்க உனக்கென்ன அக்கறை வேண்டியிருக்கு, அவள் எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்ன“

  

”அப்படியெல்லாம் விடமுடியாது அத்தை, என்னை நாலு பேரு அடிச்சி விரட்டினப்ப அவள்தான் என்னை அவள் வீட்ல தங்க வைச்சா, என் காயத்துக்கு மருந்து போட்டு விட்டா, என் பசிக்கு சாப்பாடு தந்தா, என்னை நல்லா பார்த்துக்கிட்டா, அந்த நன்றிக்காகவாவது நான் அவளை பார்த்துக்கனும்லயா”

  

”இனி உன்கிட்ட பேசினா வேலைக்கு ஆகாது, நான் பேச வேண்டிய இடத்தில பேசிக்கிறேன்“

  

”தாராளமா பேசுங்க அப்பாவுக்கு என்னாச்சின்னு தெரியலை, பித்து பிடிச்ச மாதிரி இருக்காரு, என்ன பேசினாலும் பயப்படறாரு, ஒழுங்கா பதில் பேச மாட்டேங்கறாரு, தாத்தா அதுக்கு மேல அடிக்கடி மயக்கம் போட்டு விழறாரு, இரத்த அழுத்தம் அதிகமாயிடுச்சாம் நீங்க வேற போய் எதையாவது பேசி இன்னும் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கிடாதீங்க அத்தை“

  

”அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் இப்படி ஆனதுக்கு காரணமே நீ செய்துக்கிட்ட கல்யாணம்தான்”

  

”ஷ்ஷ்ஷ் சரி முடிஞ்சதா நான் கிளம்பறேன், மீதி நீங்க திட்டறதை பொறுமையா அப்புறமா கேட்டுக்கறேன், இப்ப நான் வீட்டுக்குப் போறேன்” என அகத்தியன் சொல்ல கலாவதி கோபப் பார்வையை வீசிவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு பொன்முடி மற்றும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.