நினைச்சே இந்த 6 மாசத்தை நான் ஓட்டிட்டேன், இனியும் என்னால ஓட்டமுடியாது அவள் எனக்கு வேணும்மா”
”உன் வாயில இப்படியொரு வார்த்தை வரனும்னுதான் நானும் இத்தனை நாள் உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன், விடு எப்ப உன் மனசுல சின்ன மருமகள் இடம்பிடிச்சிட்டாளோ இனி அவளை நம்ம வீட்டுக்கு முறையா கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு, சாப்பிடு சாப்பிடு” என சாதம் அள்ளி அள்ளி வைக்க அவனோ திருப்தியுடன் சாப்பிடலானான்.
மங்களம் சொன்னது போலவே அடுத்த நாளே குலதெய்வ கோயிலுக்குச் சென்று கடா வெட்டி கறிவிருந்து செய்து சாமி கும்பிட்டு முடித்து கையோடு கையாக திருச்சிக்குப் பயணப்பட்டார்கள், வழியெங்கும் மங்களம் மகிழ்வுடன் இருக்க வீரசிங்கம் மட்டும் பலத்த யோசனையுடன் இருந்தார், வேங்கையனோ கவலையுடன் இருந்தான்.
மறுபக்கம் மஹதியோ வேங்கையனை நினைத்து நினைத்து ஒரு கட்டத்தில் அவள் வாழவே பிடிக்காமல் தற்கொலை செய்யும் அளவு துணிந்துவிட அவளை காப்பாற்றி அவளுக்கு ஆதரவாக நின்று பேசி பேசியே அவளை அமைதியாக்கி வைத்திருந்தார் மகேந்திரன், அவருக்கும் மகளின் வாழ்க்கையை நினைத்து பயமாக இருந்தது, 6 மாதம் ஆகியும் அவள் மாறாமல் இருந்தாள்.
”மஹதி மஹதி” என மகேந்திரன் அழைக்க அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள் அவளின் தோளை உலுக்கியபின்புதான் தெளிந்தாள்
”அப்பா” என்றாள் ஈனமாக
”இன்னும் எத்தனை நாள் இப்படியே நீ இருப்ப, உன்னை பார்க்க பயமாயிருக்கு உன் வாழ்க்கையை நினைச்சா கவலையா இருக்கும்மா” என்றார் வருத்தமுடன்
”எனக்கொன்னும் இல்லைப்பா, நான் நல்லாதான் இருக்கேன்“
”வாய்தான் சொல்லுது உன் முகத்தை பாரு களையிழந்துப் போயிடுச்சி, போதும்மா இன்னும் எத்தனை நாள்தான் நீ வேங்கையனுக்காக காத்திருப்ப, அவன் வரமாட்டான்மா“