வேங்கையனுக்கு முதல் முறை அவனுக்கு வந்த வெட்கம் சட்டென மறைந்து கண்கள் கலங்கிவிட்டான், கலங்கிய கண்களுடன் மஹதியைப் பார்த்து உண்மையா என்பது போல கேட்டு வைக்க மஹதிக்கும் கண்கள் கலங்கி ஆம் என்பது போல் தலையாட்டி வைக்க அதற்கு மேல் அவனால் துக்கத்தை தாங்க இயலவில்லை, சட்டென எழுந்துக் கொள்ள பாஸ்கரன் தடுத்தான்
”நண்பா என்னடா இரு எனக்கு ஒரு நல்லது நடக்கறப்ப நீ கூட இல்லைன்னா எப்படி”
”அது ஒரு முக்கியமான போன்கால், ஊருல என் சொந்தக்காரங்க கல்யாண ஏற்பாட்டை பத்தி பேசனும் அதான்”
”கல்யாணமா யாருக்குடா”
”மூர்த்திக்கும் ஜானகிக்கும் கல்யாணம்” என சொன்னதும் மஹதிக்கு தலையே சுழன்றது.
நிற்க முடியாமல் தன் தாயை பிடித்துக் கொண்டாள், மகேந்திரனுக்கு நெஞ்சு வலி வர அவர் மெதுவாக தன் நெஞ்சை பிடித்துக் கொள்ள வீரசிங்கம் சட்டென மகேந்திரன் பக்கம் அமர்ந்து அவரை தன் கையால் ஆதரவாக பிடித்துக் கொண்டார்.
”மூர்த்தி ஜானகியா யார் அவங்க” என பாஸ்கரன் கேட்க மூர்த்தியை யாருடைய மகன் என்பதும் ஜானகி யாருடைய மகள் என்பதும் அவர்களது சொந்த பந்தம் உறவு என அனைத்தையும் சொல்லியபின் பாஸ்கரனுக்கு முகம் மலர்ந்தது
”ஓ அவங்களா ஆஆ ஞாபகம் வந்துடுச்சி நண்பா, சின்ன வயசில அவங்களை பார்த்தது, அப்பவே இரண்டு பேரும் ஒத்துமையா இருப்பாங்க, ஒண்ணாவே இருப்பாங்க, இப்ப அவங்களுக்கு கல்யாணமா சந்தோஷம் சந்தோஷம், அவங்களுக்கு என்னை தெரியுமா தெரியாதான்னு கூட தெரியலையே”
”எல்லாம் உன்னைப் பார்த்தா அவங்க தெரிஞ்சிப்பாங்க, சரி நீங்க வந்த வேலையைப் பாருங்க நான் போய்ட்டு வரேன்” என சொல்லி தன் தாய் தந்தையை கண்களால் அழைத்தான்