”அப்ப போங்க போய் மாதவியை கூட்டிட்டு வாங்க” என சொல்ல அவனோ திகைத்தான்
”இப்ப எதுக்கு மாதவியை கூட்டிட்டு வர சொல்ற”
”என்னால இதுக்கு மேல நடிக்க முடியாது”
”நடிப்பா எதை சொல்ற”
”உங்களை விரும்பிக்கிட்டே வெளிய பொய்யா தோழி போல உங்களோட இருக்க முடியலை, இது நரகமா இருக்கு, இதை விட நான் உங்களை விட்டு நிரந்தரமா போறது மேல், தயவு செய்து மாதவியை கூட்டிட்டு வாங்க ப்ளீஸ்” என அவள் கைகூப்பி கெஞ்சினாள் கண்கள் கலங்கி நின்றாள். கோவலன் உடனே அவளை விட்டு விலகி பதில் சொல்ல தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.
காரில் ஏறியவன் மனம் போன போக்கில் சென்றான். அவன் சென்றதும் நிம்மதியின்றி தவித்தாள் கண்ணகி.
மறுநாள் கூட கோவலன் வீடு திரும்பவில்லை கண்ணகியும் அமைதியாக தன் வேலையை செய்தபடி இருந்தாள் அப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது, அப்போதும் கோவலன் வராமல் போகவே அதைவைத்து கண்ணகியோ மாதவியை தேடித்தான் அவன் சென்றுவிட்டதாக எண்ணி இனி இந்த வீட்டில் தனக்கு இடமில்லை என நினைத்து பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறி கேட்டிடம் வந்தாள், அந்நேரம் கோவலனின் கார் வந்து நின்றது பெட்டியுடன் நின்றவளைக்கண்டு வியப்புடன் பார்த்தான் கோவலன், மாதவியின்றி வந்தவனை திகைப்புடன் பார்த்தாள் கண்ணகி
”எங்க போற கண்ணகி”
”மாதவி எங்க”
”நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எங்க போற”