(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

முதலாளிகள் என்று கூட பாராமல் வேலையாட்களே அவ்விருவரையும் பிடித்துக் கொள்ள நாச்சியா விடுதலையானாள். சட்டென கலாவதி மாறினாள்

  

”அடப்பாவி அண்ணா, நீயாடா இப்படி செய்ய துணிஞ்சிட்ட, அவள் யாரு இந்த வீட்டு மருமகள் அவளை போய் கொல்ல துடிக்கறியே நீ ஒரு மனுஷனா“ என  பொன்முடியை பார்த்து திட்டிவிட்டு தன் தந்தையை பார்த்து

  

”என்னப்பா நீங்களும் அண்ணன்கூட சேர்ந்து இப்படி முட்டாள்தனமா முடிவெடுக்கறீங்களே தப்புப்பா, என்னதான் உங்களுக்கு இவளை பிடிக்காம போனாலும் அவள் யாரு உங்க பேரனோட மனைவி அதை மறந்துடாதீங்க, வெளிய போன அகத்தியன் திரும்பி வந்து பார்த்தா என்ன நடக்கும் வேணாம்பா இந்த பாவத்தை செய்யாதீங்க வேணாம் செய்த பாவமே போதும் விட்டுடுங்கப்பா” என கெஞ்சுவதைப் போல நடிக்க நாச்சியாவோ அவளின் நடிப்பைக் கண்டு வியந்தாள்.

  

அதே நேரம் நாச்சியாவின் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு அகத்தியன் வந்தான். வந்தவனுக்கு திக்கென்றது வேலையாட்கள் தாத்தாவையும் தந்தையையும் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ந்தான் என்ன ஆனது என கேட்டு நடந்ததை வேலையாட்கள் சொன்ன பின்பு அவனுக்கு பொல்லாத கோபம் வந்தது

  

”இனிமேல இந்த தப்பை செய்தீங்க, தாத்தானோ பெத்த அப்பானோ பார்க்க மாட்டேன்” என உக்கிரமாகச் சொல்ல நாச்சியா அவனிடம் வர அவனோ நாச்சியாவை தன் பக்கம் உரிமையுடன் இழுத்துக் கொண்டான்.

  

”நாச்சியா நான் இருக்கேன் உனக்கு, பயப்படாத உனக்கு ஒரு ஆபத்துன்னா நான் இவங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன், இங்க பாரு உன் அப்பா அம்மா வந்திருக்காங்க பாரு அவங்களுக்கு அங்க எந்தப் பிரச்சனையும் இல்லை, ஊர்க்காரங்களுக்கு உன் மேலதான் வெறுப்பே தவிர நீ இங்க வந்த பின்னாடி யாரும் அவங்களை எந்த தொந்தரவும் செய்யலை ஆனாலும் எனக்கு பயம் அதான் நான் அவங்களை கூப்பிட்டேன் ஆனா, அவங்க எந்த மறுப்பும் சொல்லாம உடனே என்கூட வந்துட்டாங்க, இனிமேல அவங்க இங்கதான் இருப்பாங்க அவங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.