கையால கொல்ல வைச்சிடாத”
”அதான் அவள் பிறந்தப்பவே கொல்ல முயற்சி செய்தீங்களே ஏதோ அன்னிக்கு நான் இருந்தேன், அவளை காப்பாத்தவே என் உயிரை விட்டேன், இப்பவும் அவளை காப்பாத்ததான் நான் திரும்பி வந்திருக்கேன், உங்களால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது, வரவும் விடமாட்டேன், அப்படி வந்தாலும் அதுக்கு காரணமானவங்களை உயிரோட நான் விடமாட்டேன், உங்களோட வாழற காலம் முடிவுக்கு வந்திடுச்சி, நீங்க செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கான மரண தேதி குறிச்சிட்டேன், சீக்கிரத்திலயே உங்களோட மரணம் நிகழும் அதுவும் என்னாலயே நிகழும்” என்றாள் ஆண்டாள் உக்கிரமாக அதைக்கேட்ட கலாவதியோ
”அம்மா நான் உன் பொண்ணு என்னையுமா நீ சாகடிப்ப”
”நீயெல்லாம் ஒரு பொண்ணா, தேவையில்லாம உன் அண்ணி மேல பொறாமைப்பட்டு போட்டி போட்டு அவளை வாழவிடாம வாழற நாட்கள்ல அவளை கொடுமை செய்து சித்ரவதை செய்து அவளை அணுஅணுவா சாகடிச்சிட்டியே, அதுக்கான தண்டனையை நிச்சயம் நீ அனுபவிப்ப“
”அய்யோ அம்மா அப்படி சொல்லாதம்மா என்னை நம்பி என் பொண்ணு அதான் உங்க பேத்தி ரூபாவதி இருக்காள்மா, என்னை உயிரோட விடுங்கம்மா” என கைகூப்பி கெஞ்ச
”அடச்சீ நிறுத்து இப்படித்தானே என் மருமகளும் உன்கிட்ட கெஞ்சியிருப்பா, அவளை வாழவிட்டியா நீ, அவள் மேல உனக்கு இரக்கமே பிறக்கலையே”
”தப்புதான்மா என்னை மன்னிச்சிடும்மா”
”மன்னிப்பா உன்னை நான் எப்படி மன்னிக்கறது, நீ மன்னிப்பு கேட்க வேண்டியது நாச்சியா கிட்ட”
”என்னது அவள்கிட்டயா புரியலயேம்மா”