”உன் அப்பனை கேளு நடந்ததை சொல்வான், நீ எனக்கு மகளா பிறந்தாலும் உனக்கு உன் அப்பன் புத்தி மொத்தமா உருவெடுத்து வந்திருக்க ஆனா, உன் பொண்ணு உன்னை போல இல்லை அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்தான், நீ கவலைப்படாத உன் பொண்ணை உன் கணவன் பார்த்துக்குவான், அவன்கிட்டதான் கோடிக்கணக்கில பணத்தை வைச்சிருக்கானே”
”என்னது சுரண்டலா” என அதிர்ச்சியுடன் கேட்டார் பொன்முடி
”ஆமாம் அதைப்பத்தி உன் பையன்கிட்ட கேளு சொல்வான்” என சொல்ல பொன்முடி குழம்பி தன் தந்தையைப் பார்க்க அவரோ அவ்விடம் இல்லாமல் போனார், எங்கே தன் தந்தை என பார்த்த சமயம் நாச்சியாவின் பின் பக்கம் இருந்து சங்கமேஸ்வரன் ஒரு கத்தியால் அவளை கொல்ல முயல அதை அறிந்த ஆண்டாளோ சட்டென திரும்பினாள் அதை சங்கமேஸ்வரன் எதிர்பார்க்கவில்லை நடுங்கிப் போனார்.
”முட்டாள் அவளை கொல்ல எத்தனை முறைதான் முயற்சி செய்வியோ, நான் இருக்கறவரை உன்னால அவளோட நிழலை கூட தொடமுடியாது, வெறும் வாய்ப்பேச்சுதானேன்னு நினைக்காத அடுத்த முறை அவளை இங்கிருந்து விரட்டறதோ, கொல்றதோ முயற்சி செய்த முதல் பலி நீயாதான் இருப்ப”
”நானா என்னையே நீ கொல்வியா நான் உன் கணவன்”
”அது நான் உயிரோட இருந்தவரைதான், இப்ப நீ என் கண்ணுக்கு அயோக்கியனாதான் தெரியற, என்னை ஏமாத்தின ஏமாத்துக்காரன் நீ, உன்னை அழிச்சாதான் இந்த ஊர் ஒண்ணு சேரும்னா அதுகூட நான் செய்ய தயங்க மாட்டேன்” என சொல்ல தாத்தாவோ
”பொன்முடி அவளை பிடிடா” என கத்த பின்பக்கம் இருந்து பொன்முடி நாச்சியாவின் உடலை பிடிக்க வர அதை உணர்ந்த ஆண்டாள் உடனே வேலையாட்களை அழைத்தாள் சத்தமாக அந்த அழைப்பு அதைக்கேட்ட நொடி அனைத்து வேலையாட்களும் ஓடி வந்து நின்றார்கள். அதற்குள் ஆண்டாள் மறைந்து நாச்சியா இருந்தாள், அவளை பொன்முடி பிடித்திருப்பதும் முன்பக்கம் இருந்து சங்கமேஸ்வரன் கத்தியால் குத்த வருவதும் போன்ற காட்சி தெரியவும் வேலையாட்களுக்கு கோபமே தலைக்கேறியது.