(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

என்ன அப்படி பார்க்குற?” என்றான்!

  

“உனக்கு ட்ரெஸ் நல்லா இருக்குன்னு எல்லாம் சொல்ல தெரியுதேங்குற அதிர்ச்சி வேற என்ன!”

  

ப்ரியம்வதா சொன்னதைக் கேட்டு வினாயக் சிரித்தான்.

  

“இனிமேல் நாம கொலீக்ஸ் இல்லை. ஆனால் எப்போவும் போல ஃப்ரென்ட்ஸ். என்னைப் பத்தி உனக்கே தெரியும். அதனால நான் பேசலைன்னு எல்லாம் யோசிக்காம டைம் கிடைக்கும் போது பேசு ப்ரியம்வதா. லெட்ஸ் பீ இன் டச். ஓகே?”

  

ஃப்ரென்ட்ஸா???

  

ப்ரியம்வதா மனதுள் பரவிய ஏமாற்றத்தை மறைக்க பெரு முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

  

🌼🌸❀✿🌷

   

இன்று!

  

கோர்ட் வளாகத்தில் இருந்த ப்ரியம்வதா கண்களால் வினாயக்கை தேடினாள். அவள் பக்கத்தில் இருந்த அவளின் அம்மா கலைவாணி புலம்பிக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள்.

  

“நகை வாங்க உன்னை நான் கூட்டிட்டு வந்தா, நீ இப்படி கோர்ட் முழுக்க சுத்த வைக்குற! என்ன தான் நினைக்குற நீ?

  

“அம்மா, நடக்குறது நல்ல எக்சர்சைஸ். அதனால புலம்பாம இருங்க,” என்றாள் ப்ரியம்வதா.

  

“ஊர்ல நம்ம வீட்டுல இருந்து மெயின் ரோடுக்கு வர நடந்தாலே ஒரு மாசத்துக்கு தேவையான எக்சர்சைஸ் எல்லாம் வந்திரும். இப்படி கோர்ட்டை சுத்தி நான் எக்சர்சைஸ் செய்யனும்னு இல்லை. அது, நம்ம ஊரு இன்ஸ்பெக்டர் தான?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.