இருந்தது!
“கங்க்ராட்ஸ் வினாயக்,” என்றாள் மகிழ்ச்சியுடன்!
“தேங்க்ஸ் ப்ரியம்வதா!”
“நீ இவ்வளவு வருஷம் அலைஞ்சிருக்கவே வேண்டாம். உன்னை தவிர வேற யாராலேயும் உன் வேலையை புரிஞ்சிருக்க முடியாது. நீ பாட்டுக்கு திரும்ப ஆரம்பத்துல இருந்து டிசைன் செய்து இந்நேரம் அந்த சைபோர்கை செஞ்சே முடிச்சிருக்கலாம். தண்டத்துக்கு அஞ்சு வருஷம் வேஸ்ட் செய்துட்ட வினாயக்!”
“இப்போவும் எதுவும் மாறலை. நீயும் நானும் ஒரே மாதிரி தின்க் செய்றோம். நான் கம்பெனில யூஎஸ்பி ட்ரைவ்ல வச்சிருந்தது ஒரிஜினல் டீடெயில்ஸ் இல்லை. டம்மி டீடெயில்ஸ். அஞ்சு வருஷமா நான் கோர்ட்டுக்கு மட்டும் அலைஞ்சுட்டு இல்லை. அமைதியா என் சைபோர்கை அட்வான்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போயிட்டேன். சட்டப்படி எல்லாம் என் பேருக்கு வரட்டும்னு தான் இந்த கேஸை ஃபேஸ் செஞ்சேன். அடுத்து, கம்பெனில சுப்ரீம்கோர்ட்டுக்கு போனாலும் போகலாம்!”
“அதெல்லாம் போக மாட்டாங்க வினாயக். அந்த கம்பெனில இருந்து ரீலீஸ் ஆன பொருள் எல்லாம் வரிசையா ஃப்ளாப் ஆயிடுச்சு. இப்போ கோர்ட், புது கேஸ்ன்னு காசு செலவு செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.”
“அப்படியா விஷயம்? நீ ஏன் வேற வேலை தேடக் கூடாது ப்ரியம்வதா? எதுக்கு அதே கம்பெனில இருக்க?”
“நான் இப்போ அங்க வேலை செய்யலை வினாயக். வேலையை விட்டு ஒரு வருஷம் மேல ஆச்சு. அப்பா இறந்தப் பிறகு அம்மா கூட இருக்க வேலையை ரிசைன் செய்துட்டேன்.”
“என்னது??? உன் அப்பா இறந்துடடரா? என் கிட்ட நீ சொல்லவே இல்லையே???”
“உனக்கே ஆயிரம் பிரச்சனை. இது வேற ஏன்னு விட்டுட்டேன்!”