(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

பேச்சே வரவில்லை

  

அதே நேரம் பாஸ்கரன் தன் வண்டியில் வந்து இறங்கினான், வேங்கையன் பாஸ்கரனிடம் சென்று சிரித்து சிரித்துப் பேசினான், அடுத்து அனைவருமாக மஹதியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். மகேந்திரனோ எப்படி பேசுவது யாரிடம் இருந்து ஆரம்பிப்பது என திகைக்க பாஸ்கரனே பேசினான்

  

”தப்பா நினைக்காதீங்க மாமா எனக்குன்னு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க ஆனா உங்களுக்கு அப்படி யாருமில்லை, ஏன்னா நீங்க லவ்மேரேஜ் இல்லையா உங்களுக்கு சொந்தங்கள் இருந்தும் கண்டிப்பா யாரும் வரமாட்டாங்க, உங்க பக்கம் ஆளுங்க இல்லைன்னா எங்க பக்க ஆளுங்க தப்பா நினைப்பாங்க, அதான் நான் என் நண்பன்கிட்ட உதவி கேட்டேன் அவனும் சரி அவன் பக்க ஆளுங்களும் சரி உங்களுக்கு சொந்தங்களா கல்யாணம் முடியறவரைக்கும் இருப்பாங்க, உங்களுக்கு சம்மதம்தானே” என சொல்ல அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தேப் போனார்கள்.

  

அதிலும் மஹதியோ வேங்கையனைப் பார்த்து கோபமாக முறைத்துவிட்டு விறுவிறுவென தன் அறைக்குச் சென்றாள். அவளின் செயலைக்கண்டும் காணாதது போல இருந்தான் வேங்கையன்

  

வீரசிங்கமும் மங்களமும்

  

”கல்யாண வேலைகளை நாங்க பார்த்துக்கறோம்“ என சொல்ல சாந்தியோ

  

”நீங்களும் இப்படி பேசலாமா” என கேட்க மகேந்திரன் உடனே தன் மனைவியிடம்

  

”அமைதியா இரு அவங்க வந்த நோக்கமே வேற பேசாம போ”

  

”எங்க போறது”

  

”உன் பொண்ணு எங்க”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.