(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”வேணாம் இது தப்பு, பாவம் மஹதி, உங்களை நினைச்சி வருத்தப்படறா இப்ப கூட எங்ககிட்ட சொன்னா, நீங்களே வந்தா கண்டிப்பா அவள் ஏத்துக்கறதா சொன்னா”

  

”என்னால என் நண்பனுக்கு துரோகம் இழைக்க முடியாது”

  

”இதுல துரோகம் இழைக்க என்ன இருக்கு, யாரவன் பழைய நண்பன்தானே, அவனுக்காக மஹதியை இழக்கனுமா முட்டாள்தனமா இருக்கு” என்றாள் ஜானகி

  

”உனக்காக உன் நட்புக்காக உன் தோழி என்னையே விட்டு வந்தாளே அது முட்டாள்தனம் இல்லையா” என கேட்க ஜானகிக்கு சுருக்கென்றது.

  

மூர்த்தியோ

  

”மஹதிக்கும் உங்களுக்கும் நடுவில இந்த நட்பு எங்கிருந்து வருது, வேணாம் நட்புங்கற பேர்ல பாவம் மஹதியோட வாழ்க்கையில விளையாடாதீங்க, இப்ப கூட அவள் உங்களைதான் நினைக்கறா”

  

”வேணாம் அது தப்பு, அதை சொல்லவே நான் வந்தேன், எனக்குத் தெரியும், நீங்க இங்க வந்து ஏதாவது பேசி குட்டையை குழப்புவீங்கன்னு, நினைச்ச மாதிரியே செய்துட்டீங்க, ஆனா நான் தெளிவா இருக்கேன் நட்புதான் எனக்கு முக்கியம்“

  

”என்னத்த பெரிய நட்போ சே” என அலுத்துக் கொண்டான் மூர்த்தி

  

ஜானகியோ மஹதியை தேடிச் சென்றாள். அங்கு அவள் கண்ணீரும் கம்பலையுமா இருக்க நொந்தேப் போனாள்

  

”என்னடி நடக்குது இங்க, வாழ்க்கை என்ன உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா போச்சா” என கேட்க மஹதியோ

  

”என்னை ஏன்டி கேட்கற அவரை போய் கேளு”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.