அவனே எதிர்பார்க்கவில்லை, தடுமாறிப் போனான்
”இப்ப சொல்லுங்க மாமா மஹதி வேணாமா உங்களுக்கு” என ஜானகி கேட்க வேங்கையனோ மஹதியைப் பார்த்தான், அவளோ அப்போதும் ஏக்கத்துடனே இருந்தாள்.
”சொல்லு இப்பவாச்சும் சொல்லு“ என மனதுள் கெஞ்சினாள் அவனோ அவளின் ஏக்கப் பார்வையையும் மீறி ஜானகியிடம்
”வம்பு பண்றதுக்குன்னே புறப்பட்டு வந்தியா நீ, கல்யாண பத்திரிகை கொடுக்கற வேலையிருக்குல்ல உனக்கு, கிளம்பு மூர்த்தியோட ஊரு போய் சேரு”
”அப்ப நீங்க இங்க இருந்து என்ன செய்யப் போறீங்க”
”பாஸ்கரனுக்கும் உன்னோட தோழிக்கும் கல்யாணம் ஆகற வரைக்கும் இருந்து எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு அப்புறம் நாங்க எல்லாரும் கிளம்பி வர்றோம்” என சொல்ல மஹதிக்கு துக்கம் தொண்டையடைத்தது
குலுங்கி குலுங்கி அழுதபடியே தன் அறை நோக்கி ஓடினாள்.
அவளின் கண்ணீர் அவனை பாடாய்படுத்தியது. ஜானகியோ வேங்கையனை வெறுத்தாள்
”சே நீயெல்லாம் ஒரு மனுஷனா, என்னை விட மோசமானவனா இருக்கியே, நானாவது என் காதலுக்காக படாதபாடு பட்டேன், அதுக்காக எந்த எல்லை வரைக்கும் போய் வந்தேன், மானம் மரியாதையை இழந்தேன், கடைசியில என் காதல்ல ஜெயிச்சேன் ஆனா நீ என்ன செய்த பாவம் மஹதி அவளை இப்படி அழவைச்சிட்டியே” என ஜானகி திட்ட வேங்கையனோ
”போதும் ஜானகி என் பொறுமைக்கும் எல்லையுண்டு கிளம்பு இங்கிருந்து போ” என விரட்ட அவளோ
”இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்” என சொல்ல வேங்கையனோ கோபம் கொண்டான்