கேட்டால் வம்பாகும் என எண்ணியவன் காதை பொத்திக் கொண்டு உறங்கலானான், பல கடைகள் ஏறி இறங்கியதில் அவனுக்கு ஒரே அசதி, அமைதியாக அவன் உறங்க கண்கள் கலங்கியபடி அவனையே பார்த்த மஹதியோ
”போதும் ஜானகி நான் போறேன்” என்றாள் ஜானகியும் ஏமாற்றத்துடன்
”சரி வா போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடியது, வேங்கையனோ மின்னல் போல வேலையில் இறங்கினான், என்னவோ அவனது கல்யாணம் போல ஓடி ஓடி வேலை செய்தான், மகேந்திரனால் கூட இவ்வளவும் செய்திருக்க இயலாது, மஹதிக்கே ஆச்சர்யம், மங்களம் ஏன் அமைதியாகவே இருக்கிறார் என்று
இன்னும் மஹதியையும் மங்களத்தையும் பேசவிடாமல் பார்த்துக் கொண்டான் வேங்கையன், திருமணத்திற்கு நாள் நெருங்க நெருங்க மஹதிக்கு காய்ச்சலே வந்துவிட்டது, அதற்கு வைத்தியம் செய்ய பாஸ்கரன் வந்தான், மஹதியின் காய்ச்சலுக்கு மருந்தளித்துவிட்டு கல்யாண வேலைகளைப் பற்றி வேங்கையனிடம் பேசிவிட்டு சென்றான்.
மஹதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அவள் தேய்ந்து போனாள். சரியாக உண்ணாமல் நிம்மதியாக உறங்காமல் ஒரு நோயாளி போல அவள் எந்நேரமும் படுத்துகிடக்க வேங்கையனுக்கு கஷ்டமாகிப் போனது, அனைவருமே அவனையே காரணம் காட்டினார்கள், திட்டினார்கள், கெஞ்சினார்கள் ஆனால் அவன் யாருக்கும் மசியவில்லை உறுதியாக இருந்தான்
மஹதியின் இந்த நிலைமை மாற வேண்டும் சரி அவளிடம் பேசலாம் என திருமணத்திற்கு முதல் நாள் காலை அவளை தேடி அவளது அறைக்கு வந்தான் வேங்கையன்.
அங்கு அவள் நோயாளி போல படுத்திருக்கவும் அவளிடம் சென்றான், அவளோ அவன் வந்ததைக்கண்டு மகிழ்ந்தாள். சிரித்தாள் ஆனால் அவனோ
”உன் நடிப்பை மத்தவங்க வேணா நம்புவாங்க, ஆனா நான் நம்ப மாட்டேன், இதே போல நடிச்சிதானே என் வீட்டுக்குள்ள சின்ன மருமகள்ன்னு பெயர் சொல்லிக்கிட்டு உள்ள நுழைஞ்ச,