(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

கடைசியில பாரு ஜானகி மூர்த்திகிட்ட போயிட்டா நான் தனியாயிட்டேன், நான் இப்படி ஆனது கூட பரவாயில்லை ஆனா உன்னால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், இப்ப கூட நீ இப்படி இருக்கறதுக்கு நான்தான் காரணமும் எல்லாரும் சொல்றாங்க

  

இது எனக்கு தேவையா நீ பாட்டுக்கு அன்னிக்கு கிளம்பி ஊருக்கு போயிட்ட, நீ போன பின்னாடி என் அப்பா அம்மா என்னை விட்டுட்டு பண்ணை வீட்ல தங்கிட்டாங்க, என்னால என் வீட்ல இருக்க முடியாம ஜானகியை அவளோட அப்பா வீட்ல விட்டுட்டு தனியா நான் மட்டும் தோப்புல வீட்ல இருந்தேன், 6 மாசம் அப்பா அம்மா இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா உனக்கு

  

எனக்கு டைவர்ஸ் கிடைச்சதும் என் அப்பா அம்மாவை பார்க்கப் போனேன், அப்பதான் அவங்க என்னை சேர்த்துக்கிட்டாங்க, அவங்களுக்காகவே நான் ஜானகியை விட்டுட்டு வந்தேன், இப்ப உனக்காக நான் அவங்களை இழக்கனுமா, அம்மா தாயே கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கிறேன், வேணும்னா உன் கால்ல கூட விழறேன், தயவு செஞ்சி இப்படி நடிக்கறதை நிறுத்திட்டு கல்யாணத்துக்கு ரெடியாகு

  

உன் நடிப்பைக்கண்டு யார் வேணும்னாலும் ஏமாறலாம் ஆனா இனி நான் உன்னால ஏமாறமாட்டேன், இதைப் போய் காதல்ன்னு சொன்னா அதை ஒரு முட்டாள் கூட நம்பமாட்டான், நானும் உன் காதலை உண்மைன்னு நம்ப மாட்டேன், வெட்டியா ட்ராமா போடாம ஒழுங்கா இருக்கப் பாரு புரியுதா” என படபடவென சொல்லிவிட்டு அவன் அந்த அறையை விட்டு சென்றான்.

  

அவன் சென்றதும் அவன் பேசிய வார்த்தைகளை அடிக்கடி நினைத்துப் பார்த்தாள், நடிப்பா தனது நிலைமை நடிப்பு போலவா உள்ளது, இப்படி பேசிவிட்டானே, நடிப்பு என்றானே, எனது காதல் அவனுக்கு நடிப்பு போலாவா உள்ளது, என் காதலை இப்படி கொச்சைப்படுத்திவிட்டானே பாவி என நினைத்து நொந்துக் கொண்டாள்.

  

வேங்கையன் பேசிவிட்டான், பேசி முடித்து தனியாக ஒரு இடம் பார்த்து அமர்ந்து ஓவென கதறி அழுதான், அந்த அழுகையை ஜானகிக்காக கூட அவன் சிந்தியதில்லை, தன் கையாலேயே தனது கன்னத்தில் பளார் பளார் என அடித்துக் கொண்டு தனது வேதனையை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.