(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”பாவம்டா சின்ன மருமகள் அவள் அழுதது என் கண்லயே நிக்குது, நான் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லட்டுமா”

  

”ஒண்ணும் வேணாம், அவளுக்கு அவங்கம்மா இருக்காங்க, நீ சொல்லு சட்டுன்னு லிஸ்ட் எழுதி முடிச்சி கடைக்குப் போகனும், எல்லா பொருளையும் வாங்கிட்டு வரனும்” என சொல்ல மங்களம் நொந்துப் போய் அடுத்தடுத்த பொருட்களின் பெயர்களை சொல்ல அவனும் எழுதலானான்.

  

லிஸ்ட் முடிந்ததும் அவன் குபேரனையும் தன் தந்தையையும் மூர்த்தியையும் அழைத்துக் கொண்டு கடைகளுக்குச் சென்றான், பஸ் இருந்தபடியால் வாங்கிய பொருட்களை அப்படியே பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்ப இரவானது.

  

மகேந்திரனோ அசந்துவிட்டார், வேங்கையன் வாங்கி வந்த பொருட்களை வீட்டிற்குள் அடுக்கினான்.

  

அதற்கான பணம் கூட அவன் வாங்கவில்லை.

  

”எதுக்குப்பா இப்படி செய்ற”

  

”என்ன செய்றேன் தேவையான எல்லாமே வாங்கியாச்சி, போதுமான்னு பாருங்க இல்லைன்னா வாங்கிட்டு வந்துடறேன்”

  

”வாங்கின வரைக்கும் போதும் எவ்ளோ ஆச்சின்னு சொல்லு பணம் தரேன்”

  

”வேணாம்“

  

”ஏன் வேணாம் இது என் பொண்ணோட கல்யாணம் நான்தானே செலவு செய்யனும்“

  

”நானே பணம் தந்துட்டேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.