”இருக்கு அதனாலதான் உங்களை கைது செய்ய வந்திருக்கோம்”
”நான் வக்கீல் கிட்ட பேசிட்டு வரேன்”
”அதுக்கெல்லாம் நேரமில்லை எங்களோட வாங்க தகராறு செய்தீங்கன்னா உங்களுக்குதான் கஷ்டம்” என சொல்ல கண்ணகி கலங்கினாள்
”இல்லை அவர் கொலை செய்திருக்க மாட்டாரு”
”இதப்பாருங்க ஆதாரம் இல்லாம நாங்க எதையும் சொல்லலை, தயவு செய்து தகராறு செய்யாதீங்க” என சொல்ல கோவலன் பலமாக யோசித்தான் அவனது யோசிப்பைக்கண்ட கண்ணகி சந்தேகப்பட்டாள். போலீஸ் அதிகாரிகளோ அவனை கைது செய்து அழைத்துச் சென்றார்கள், கண்ணகியோ அழுகையுடன் நிற்க அவனோ
”நான் எந்த கொலையும் செய்யலை கண்ணகி என்னை நம்பு”
”நான் நம்பறேன் எப்படியாவது உங்களை நான் மீட்கறேன்” என சொல்ல அவனும் நிம்மதியானான்.
அவர்கள் சென்றதும் துரிதமாக வேலையில் இறங்கினாள் கண்ணகி, உடனே உதயமூர்த்திக்கு தகவல் அளித்தாள் அவர் வரும் போதே வக்கீலுடன் வந்தார், அவரிடம் கலந்து பேசி அனைவருமாக போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள், அதற்குள் கோவலன் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்கள். அதைக் கேட்டு டென்ஷன் ஆனாள் கண்ணகி
வக்கீலும் தன் பங்கிற்கு போலீசிடம் பேசிப் பார்த்தும் பலனில்லை நாளை கோர்ட்டில் வந்து பார்க்குமாறு சொல்லிவிட அனைவருக்குமே பேரிடியாக இருந்தது.
இந்த விசயம் செய்திதாள் மீடியா வரை சென்றது, கல்லூரி மாணவர்களால் இதை நம்ப இயலவில்லை. கோவலனை லாக்கப்பில் வைத்து மிரட்டினார்கள், அவனோ இல்லை நான் நிரபராதி நான் கொலை செய்யவில்லை என்றே சொல்லி வைத்தான், கண்ணகிக்கு ஒன்றும்