பிடிச்சான் அதுல கோவலன் கோபப்பட்டு சிலம்புவை அடிச்சாரு
அப்படியே அவங்க சண்டை பெரிசாயிடுச்சி, அதுல கோவலன் சிலம்புவை அடி அடின்னு அடிச்சி ரோட்ல தள்ளிட்டாரு அதுல அவன் மயங்கிட்டான், அதோட என்னை கூட்டிட்டுப் போய் அவரோட எஸ்டேட் பங்களால தங்க வைச்சாரு, நான் ரொம்ப பயந்திருந்தேன் கோவலன்தான் எனக்கு ஆதரவா இருந்தாரு, அவரோட பங்களாலதான் இத்தனை நாளும் நான் இருந்தேன், அங்க எனக்கு பாதுகாப்புக்கு ஆளுங்களை வைச்சாரு நேத்து நியூஸ் பார்த்துட்டு பதறிக்கிட்டு வந்தேன்” என சொல்ல கண்ணகியோ
”ஓ அப்ப நான் யூகிச்சது சரிதான் உன்னை தேடி ஊட்டிக்கு வந்திருக்காரு போல”
”நான் அங்க இருக்கறது அவருக்குத் தெரியாது கண்ணகி எதேச்சையா வந்திருக்காரு அவர் வந்ததும் நல்லதா போச்சி, என்னை சிலம்புகிட்டயிருந்து காப்பாத்தினாரு இல்லைன்னா என்ன ஆயிருக்கும்”
”சரிடி கோவலன் சிலம்புவை கொன்னுட்டதா சொல்றாங்களே அது எப்படி”
”ஒருவேளை கோவலன் அடிச்ச அடியில அவன் மயங்கிட்டதா நாங்க நினைச்சிட்டு வந்துட்டோம் அப்படியில்லாம அவரு அடிச்ச அடியில அவன் செத்திருந்தா”
”இல்லை அப்படியிருக்காது மாதவி”
“எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனா பாதிக்கு பாதி சந்தேகமாகவும் இருக்கு”
”போலீஸ்கிட்ட ஆதாரங்கள் இருக்கு அதை வைச்சிதான் அவங்க வந்திருக்காங்க, அப்படி என்ன ஆதாரம் இருக்குன்னு தெரியலையே”
”கோர்ட்டுக்கு போனா தெரியும் அதுக்கு முன்னாடி கோவலனை பார்க்கனும், இந்த விசயத்தில நிஜமாவே கொலைன்னு நிரூபிச்சிட்டா கோவலனுக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போவேன்”
”மாதவி என்ன சொல்ற நீ”