(Reading time: 16 - 31 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 15 - சசிரேகா

மாலை நேரம் ரிசப்ஷனுக்கான வேலைகள் மண்டபத்தில் துரிதமாக நடந்துக் கொண்டிருக்க வேங்கையன் பம்பரம் போல சுழன்றுக் கொண்டு வேலை செய்தான், அவனது பெற்றோரும் வந்தோரும் ஆளுக்கொரு வேலைகளை கையில் எடுத்துக் கொண்டு செய்யலானார்கள், மகேந்திரனுக்கு எந்த வேலையும் இல்லை அவருக்கு மனபாரம் அதிகமானது அதை மறைத்து உடல்நிலை சரியில்லை என சொல்லி ஒரு இடமாக அமர்ந்துவிட்டார்.

  

வேங்கையன் பேச்சில் மஹதி கோபத்தில் தன்னை திடமாக்கிக் கொண்டாள், அதுநாள் வரை நோயாளியாக இருந்தவள் இப்போது பளிச்சென மாறினாள், மணமகள் அறையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு அலங்காரம் செய்தார்கள் சில பெண்கள், கூடவே ஜானகியும் சாந்தியும் இருந்தார்கள், அவளை பார்த்து முறைத்தபடி இருந்தார்கள், மஹதியோ அதைக்கண்டுக் கொள்ளவில்லை.

  

”இதப்பாருடி நீ செய்றது ரொம்ப தப்பு, என்னதான் வேங்கையன் அப்படி பேசியிருந்தாலும் இப்படியா நீ மாறுவ, நானா இருந்திருந்தா, நீ என்னடா சொல்றது நான் உனக்குதான்னு நின்னு பேசியிருப்பேன் தெரியுமா, நீ என்னடான்னா இப்படி கோழையா இருக்கியேடி சே” என ஜானகி அலுத்துக் கொள்ள மஹதி அதை காதால் கூட கேட்கவில்லை, அவளுக்கு அழகாக மேக்கப் செய்தார்கள் அதில் அவள் தேவதை போலவே இருந்தாள், சாந்தியோ தன் மகளிடம்

  

”மஹதி என்னதான் மேக்கப் போட்டு உன்னை அழகாக்கினாலும் அந்த அழகுக்கு பின்னாடி உன்னோட கவலை வருத்தம் இதுதான் என் கண்ணுக்குத் தெரியுது, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை நான் வேணா மாப்பிள்ளை வீட்ல பேசிப் பார்க்கிறேன், அவங்க படிச்சவங்க புரிஞ்சிப்பாங்க, இந்த கல்யாணத்தை நிப்பாட்டலாம்” என சொல்ல மஹதியோ நொந்துப் போய் அங்கிருந்த பெண்களைப் பார்த்து

  

”முடிஞ்சிடுச்சா” என கேட்க அவர்களும் ஆம் என சொல்ல உடனே அவர்களுக்கு உண்டான பணத்தை தந்து அனுப்பிவிட்டு தன் தாயிடம்

  

”நான் ரெடிம்மா” என்றாள்

  

“எதுக்கு நரகத்துல வாழ போறதுக்கா”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.