(Reading time: 16 - 31 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”நான் ரெடி” என்றாள் வெறுப்புடன் அவளை அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றாள்.

  

மஹதிக்கு வெறுப்பாக இருந்தது, தலையை தாழ்த்திக் கொண்டுச் சென்றாள். மேடையில் நின்றதும் அவள் தலை நிமிர்த்தவில்லை, போட்டோகிராபர் போட்டோ எடுக்க அரும்பாடு பட்டார், அவளை தலை நிமிர்த்த சொல்ல அவளோ தயங்கினாள், பக்கத்தில் இருந்த பாஸ்கரனோ

  

”மஹதி என்னாச்சி வெட்கமா அது அப்புறம், இப்ப போட்டோவுக்கு போஸ் கொடு அப்பதான் போட்டோ அழகா வரும்” என சொல்ல அவளோ நொந்தபடியே தலைநிமிர்ந்துப் பார்த்தாள்.

  

போட்டோக்கள் எடுக்கப்பட்டது, அவளோ கண்களால் அங்கும் இங்கும் பார்த்தாள் வேங்கையனை தேடினாள், எங்கும் அவன் தென்படவில்லை, வரிசையாக திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் மொய் கொடுக்க வந்தார்கள், அவளுக்கு வந்ததை ஜானகி வாங்கிக் கொண்டாள், இயந்திரதனமாக அந்த ரிசப்ஷன் முடிந்தது, ஒரு முறை கூட அவள் பாஸ்கரனை ஏறிட்டும் பார்க்கவில்லை, அவளோ ஜானகியிடம் மெதுவாக கேட்டாள்

  

”வேங்கையன் எங்க“

  

”எதுக்கு கேட்கற”

  

”சொல்லு”

  

”அதான் எதுங்குங்கறேன்”

  

”கேட்டா சொல்ல மாட்டியா”

  

”நீ விசயத்துக்கு வா எதுக்கு நீ அவரை தேடற”

  

”நான் இப்படி இருக்கனும்னுதானே அவர் ஆசைப்பட்டாரு அதான் அவர் முன்னாடி போய் நிக்கலாம்னு இருக்கேன்“

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.